தில்லி கண்டோன்மெண்ட் பகுதியில் கந்தர் லைன்ஸில் 4 ஆம் எண் கேந்திரிய வித்யாலயாவை கட்ட பாதுகாப்புத் துறைக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை நிரந்தரமாங்க கேந்திரிய வித்யாலய சங்கதத்திற்கு அளிக்க பிரதமர் திரு. மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வருடத்திற்கு ரூ. 1/- வாடகையாக வசூலிக்கப்படும்.
பின்னணி:
1994 ஆம் ஆண்டு நிறுவப்பட்டதிலிருந்து தில்லி கண்டோன்மெண்ட் கேந்திரிய வித்யாலயா எண்: 4 தில்லி கண்டோன்மெண்ட்டில் உள்ள சர்வே எண்: 14 உள்ள தற்காலிக கட்டிடத்தில் இயங்கிவருகிறது. தற்போது இந்த பள்ளியில் 956 மாணவர்கள் பயின்று வருகின்றனர். சேவையில் உள்ள பாதுகாப்புத் துறை பணியாளர்கள், முன்னாள் வீரர்கள் குடும்பத்தினர் மற்றும் தில்லி கண்டோன்மெண்ட் மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ள குடிமக்களின் குழந்தைகள் பயின்று வரும் இந்த பள்ளிக்கு சொந்த கட்டிட வசதி அமைந்தால் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளையும் அமைத்து மேலும் தரமான கல்வியை அளிக்க முடியும்.