பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று (03.07.2018) கென்யாவின் முன்னாள் பிரதமரும், எதிர்க்கட்சித் தலைவருமான திரு. ரய்லா ஒடிங்காவைச் சந்தித்தார்.
பத்தாண்டுகளுக்கு முன்பு, குஜராத் முதலமைச்சராக தாம் இருந்தபோது, கென்யாவுக்கு பயணம் மேற்கொண்டதையும், அதனால் ஏற்பட்ட நீண்டகாலத் தொடர்பையும் பிரதமர் மோடி அன்புடன் நினைவுகூர்ந்தார். திரு.ஒடிங்காவும் 2009 மற்றும் 2012-ஆம் ஆண்டுகளில் தாம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டதை நினைவுகூர்ந்தார்.
அண்மைக்காலத்தில் இந்தியா – கென்யா இடையிலான உறவுகளில் முன்னேற்றம் மற்றும் பிராந்திய அளவிலும், உலக அளவிலும், பரஸ்பரம் ஆர்வம் உடைய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
*****
Dr. Ida Odinga and Mr. @RailaOdinga met PM @narendramodi earlier today. pic.twitter.com/uffro1WhtN
— PMO India (@PMOIndia) July 3, 2018