Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

நாடு முழுவதும் உள்ள சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் கலந்துரையாடல்


நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களின் மூலம் பயனடைந்தவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடினார். அடல் பீமா திட்டம், பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் சுகாதார காப்பீட்டு திட்டம் மற்றும் வயவந்தனா திட்டம் ஆகிய நான்கு பெரும் சமூக பாதுகாப்பு திட்டங்களில் பயனடைந்தவர்களுடன் இந்தக் கலந்துரையாடல் செய்யப்பட்ட்து. பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்தவர்களுடன் காணொளிக் காட்சி மூலம் பிரதமர் மேற்கொண்ட எட்டாவது கலந்துரையாடல் ஆகும் இது.

கடும் இன்னல்களை எதிர்கொண்டு வலிமை கொண்டவர்களாக உருவெடுத்தவர்களுடன் கலந்துரையாடுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, சமூக பாதுகாப்பு திட்டங்கள் மக்களுக்கு அதிகாரமளித்திருப்பதாக கூறினார். தற்போதைய அரசின் சமூக பாதுகாப்பு திட்டங்கள் வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மைகளை சிறப்பாக எதிர்கொள்ள மக்களுக்கு உதவியிருப்பது மட்டுமின்றி, குடும்பத்தின் நிதி ரீதியான கடுமையான சூழல்களை மீறி அவர்கள் உயருவதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு அளித்துள்ளது என்றார்.

ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அரசு மேற்கொண்டுவரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் விளக்கினார். இவை வங்கிச் சேவைகளை பெறாத ஏழைகளுக்கு வங்கியின் கதவுகளை திறந்து விட்டிருப்பது, சிறு வர்த்தகர்கள் மற்றும் வளரும் தொழில்முனைவோர் மூலதனத்தை அணுகுவதற்கு நிதிவசதி அல்லாதோருக்கு நிதி அளித்திருப்பது, ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமூக பாதுகாப்பை அளித்திருப்பது, பாதுகாப்பவற்றவர்களுக்கு நிதி பாதுகாப்பு அளித்திருப்பது ஆகியவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் ஜன் தன் திட்டத்தின் கீழ் 2014-17 காலக்கட்டத்தில் திறக்கப்பட்டுள்ள 28 கோடி வங்கிக் கணக்குகள் எண்ணிக்கை உலகில் தொடங்கப்பட்டுள்ள மொத்த வங்கிக் கணக்குகள் எண்ணிக்கையில் 55 சதவீதம் என பயனாளிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் கூறினார். இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையிலான மகளிர், வங்கிக் கணக்குகள் வைத்திருப்பது குறித்து மகழ்ச்சி தெரிவித்த அவர், இந்தியாவில் வங்கிக் கணக்குகளில் எண்ணிக்கை 2014ல் இருந்த 53 சதவீதத்தில் இருந்து 80 சதவீத்த்தை எட்டியுள்ளது என்றார்.

மக்கள் எதிர்கொண்ட துயரங்கள் குறித்து செவிமடுத்த பிரதமர், மனித உயிரிழப்பை ஈடுசெய்ய முடியாது என்ற போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பொருளாதார பாதுகாப்பை உறுதிசெய்ய அரசு எப்போதும் பாடுபட்டு வருகிறது என்றார். சுமார் ரூ. 300 பிரீமியம் செலுத்தி பிரதமர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானவர்கள் பயனடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

விபத்து காப்பீட்டு திட்டம் பற்றி குறிப்பிடுகையில், பிரதமர் பாதுகாப்புத் திட்டத்தை 13 கோடிக்கும் கூடுதலான மக்கள் பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 மட்டும் பிரீமியமாக செலுத்தி ரூ. 2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெறமுடியும்.

வயதானோர் மற்றும் முதியவர்களை பராமரிக்கும் வகையில் அரசின் பல்வேறு முயற்சிகள் குறித்து பிரதமர் இந்தக் கலந்துரையாடலின் போது விவரித்தார். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட வய வந்தனா திட்டத்தின் கீழ் சுமார் மூன்று லட்சம் முதியோர் பயனடைந்திருப்பதாகவும், இந்த திட்டத்தின் கீழ் 60 வயதைக் கடந்த முதியவர்கள் 10 ஆண்டுகளுக்கு 8 சதவீத நிலையான பயன்களைப் பெற முடியும் என்றும் அவர் கூறினார். இதுதவிர வருமான வரிக்கான உச்சவரம்பை அரசு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரு. 3 லட்சமாக அதிகரித்துள்ளது. வயது முதிர்ந்தவர்களின் நல்வாழ்வில் அரசு உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் உறுதிபடக் கூறினார்.

அனைவருக்கும் சமூக பாதுகாப்பு அளிக்க அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், கடந்த மூன்றாண்டுகளில் அரசின் மூன்று பெரும் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் (பிரதமர் விபத்து காப்பீட்டு திட்டம், பிரதமர் ஆயுள் காப்பீட்டு திட்டம் மற்றும் அடல் ஓய்வூதிய திட்டம்) கீழ் 20 கோடிக்கும் அதிகமான மக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தனது மக்கள் அனைவரின் குறிப்பாக ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்த தனது முயற்சிகளை அரசு தொடரும் என பயனாளிகளிடம் உறுதி அளித்த பிரதமர், இயன்ற சிறந்த வகையில் அவர்களுக்கு அதிகார்ம் அளிக்கப்பட்டது.

பெரும் தேவை ஏற்பட்ட தருணங்களில் இந்த திட்டங்கள் எந்தவகையில் தங்களுக்கு பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்கள் உதவிகரமாக அமைந்த்து என்பதை பிரதமருடன் கலந்துரையாடிய பயனாளிகள் விவரித்தனர். பிரதமர் அறிமுகம் செய்த பல்வேறு திட்டங்களுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்ட பயனாளிகள், இவற்றில் பல திட்டங்கள் பலருக்கு வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.