Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

வளர்ச்சி மற்றும் தட்பவெட்ப மாற்றம் குறித்த ஜி20 மாநாட்டின் மதிய உணவுக் கூட்டத்தில் பிரதமரின் உரை

வளர்ச்சி மற்றும் தட்பவெட்ப மாற்றம் குறித்த ஜி20 மாநாட்டின் மதிய உணவுக் கூட்டத்தில் பிரதமரின் உரை

வளர்ச்சி மற்றும் தட்பவெட்ப மாற்றம் குறித்த ஜி20 மாநாட்டின் மதிய உணவுக் கூட்டத்தில் பிரதமரின் உரை

வளர்ச்சி மற்றும் தட்பவெட்ப மாற்றம் குறித்த ஜி20 மாநாட்டின் மதிய உணவுக் கூட்டத்தில் பிரதமரின் உரை

வளர்ச்சி மற்றும் தட்பவெட்ப மாற்றம் குறித்த ஜி20 மாநாட்டின் மதிய உணவுக் கூட்டத்தில் பிரதமரின் உரை


தலைவர் எர்டோகன் அவர்களே,

மேதகு தலைவர்களே

இந்த அனத்தால்யா நகரின் அழகிய சூழலில் தரப்பட்டுள்ள அற்புதமான வரவேற்புக்காக தலைவல் எர்டோகன் மற்றும் துருக்கிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகுக்கு வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாம் ஜி20 நாடுகளாக கூடியிருக்கிறோம்.

மோசமான தீவிரவாதச் செயலின் நிழலில், வலி, வேதனை மற்றும் அதிர்ச்சியால் ஒன்றுபட்டு இருக்கிறோம்.

பாரீprல் நடந்த தீவிரவாதத் தாக்குதலையும், அங்காரா மற்றும் லெபனானில் நடந்த குண்டு வெடிப்புகளையும் கண்டிப்பதில் நாம் ஒன்றுபட்டு இருக்கிறோம். சினாய் பகுதியில் விழுந்த ரஷ்ய விமானத்தில் இறந்த உயிர்களுக்காக நாம் வேதனையை;g பகிர்ந்து கொள்கிறோம்.

இந்த சம்பவங்கள், ஒரு குழுவாகவும் அல்லாமல், குறிப்பிட்ட இலக்காவும் அல்லாமல், குறிப்பிட்ட பகுதியிலும் அல்லாமல் எல்லா வகையிலும் அச்சுறுத்தும் இருண்ட சக்தியை நாம் எதிர்கொள்வதை நினைவூட்டுகிறது.

இந்த காலகட்டத்தில் இது உலகளாவிய சவால். இது வருந்தக்கூடிய வகையில் உயிர்களை மட்டும் பலிகொள்வதில்லை. கூடுதலாக, பொருளாதாரத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதோடு, நமது வாழ்க்கை முறையையே அச்சுறுத்துகிறது.

இது உலகளாவிய அளவிளான பதில் நடவடிக்கைக்கான தேவையை வலியுறுத்துகிறது. இதை எதிர்த்துப் போராடுவது ஜி20 நாடுகளின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

இது குறித்து விவாதிப்பதற்காக ஒரு சிறப்பு அரங்கத்தை ஏற்பாடு செய்த துருக்கிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மேதகு தலைவர்களே, இன்று உலகின் முன்னால் உள்ள இரு பெரும் சவால்களான வளர்ச்சி மற்றும் தட்ப வெட்ப மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக இந்த அரங்கத்தில் கூடியிருக்கிறோம்.

இந்த ஆண்டு மைல்கல் ஆண்டு. ஐக்கிய நாடுகள் அவை தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அவையில் நாம் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளோம். நிலையான எதிர்காலத்தை இந்த கோளத்துக்காக நிர்ணயிக்க உள்ளோம்.

மேதகு தலைவர்களே,

2030ம் ஆண்டுக்குள், வறுமையை இந்த உலகிலிருந்து முழுமையாக அகற்றுவதை பல்வேறு இலக்குகளில் இலக்காக SDG நிர்ணயித்துள்ளது. வளர்ச்சி, மனிதவள மேம்பாடு, சுற்றுச்சூழல் ஆகிவற்றை சரியான விகிதத்தில் அது நிர்ணயித்துள்ளது.

ஜி20 SDGயோடு இணைந்து செயலாற்ற வேண்டும். அப்படி செய்வதன் மூலம், நாம் இன்னும் விரைவான மற்றும் விரிந்த பொருளாதார வளர்ச்சியைக் காண முடியும்.

மேதகு தலைவர்களே,

இந்தியாவின் வளர்ச்சிக்கான இலக்குகள் SDGயோடு இணைந்துள்ளன.

நாங்கள் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் திறன்களில் முதலீடு செய்து, உட்கட்டமைப்பு வளர்ச்சியை துரிதப்படுத்தி, வளர்ச்சியை ஒருமுகப்படுத்துகிறோம்.

உலகின் மிகப்பெரிய நிதி ஒருங்கிணைவு திட்டத்தை நாங்கள் வைத்துள்ளோம். எங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான தேதியை இலக்காக நிர்ணயித்துள்ளோம்.

பொருளாதாரம் மற்றும் நிர்வாகத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் காரணமாக, எங்கள் வளர்ச்சி விகிதம் 7.5 சதவிகிதமாக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி விகிதம் மேலும் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.

எங்களின் பிரம்மாண்டமான அளவால், உலக வளர்ச்சியில் முக்கிய தூணாக நாங்கள் உருவாக உள்ளோம்.
மேதகு தலைவர்களே,

நாங்கள் இந்தியாவில், வளர்ச்சியையும் தட்பவெட்ப மாற்றத்தையும் முரணான விஷயங்களாக பார்க்கவில்லை. மனிதகுலத்தின் ஒற்றுமை மற்றும் இயற்கையின் மீது வைத்துள்ள நம்பிக்கையே இதன் அடிப்படை. தட்பவெட்ப மாற்றத்தில் உள்ள சவால்களை சந்திக்க பல்வேறு திட்டங்களை வைத்துள்ளோம்.

2022ம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் மறுசுழற்சி எரிசக்தித் திட்டம், இதில் ஒரு பகுதி. சுத்தமான எரிசக்தி தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்காக படிம எரிபொருள் மீதும், நிலக்கரி மீதும் வரி, தேசிய சுத்தமான எரிசக்தி நிதியத்தில் 3 பில்லியன் டாலர் முதலீடு ஆகியவற்றை செய்துள்ளோம்.

எங்களின் உத்வேகமான திட்டங்களாலும், தேசிய நல்லெண்ண நிதிகளாலும், இந்தியா உலக நாடுகளோடு இணையாக பயணிக்கும்.

பாரீசில் நடைபெற உள்ள தட்பவெட்ப மாற்றத்துக்கான ஐக்கிய நாடுகள் அவையின் மாநாட்டில் ஐநா வரையறைக்குள், இதற்காக ஒரு தீர்மானமான முடிவு வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கிறோம். ஐக்கிய நாடுகள் அவையின் வரையறை, சமமான, பொறுப்புடன் கூடிய, வழிமுறையை பரிந்துரைக்கும்.

மறுசுழற்சி எரிசக்தி தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஜி20 நாடுகளாகிய நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியும். சுத்தமான எரிசக்திக்கான உலகின் நோக்கத்தை நிறைவேற்றத் தேவையான நிதியும் தொழில்நுட்பமும் இருக்கும் வகையில் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

100 பில்லியன் டாலர்கள் என்ற இலக்கை 2020ம் ஆண்டுக்குள் நாம் அடைய வேண்டும்.

2030ம் ஆண்டுக்குள், பொதுப் போக்குவரத்தில் மக்களின் பங்களிப்பை 30 சதவிகிதம் அதிகரிக்க ஜி20 நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரிம உமிழ்வு அகற்றல் வரவில் இருந்து நாம் பசுமை வரவுக்கு மாற வேண்டும்.

இலக்குகள் குறித்துப் பேசுகையில் நாம் படிம எரிபொருள் பயன்பாட்டை குறைப்பது மட்டுமல்லாமல், நம் வாழ்க்கை முறையையும் மாற்றிக் கொள்ள வேண்டும்.

இயற்கையோடு இணைந்த வளர்ச்சி என்பதே, நான் பிரான்ஸ் அதிபர் ஹோலாண்டேவோடு சேர்ந்து COP21 கூட்டத்தில் தொடங்க உள்ள சூரிய ஒளி நாடுகளுக்கான கூட்டணி.

மேதகு தலைவர்களே, வளர்ச்சி குறித்து சில விஷயங்களை குறிப்பிட்டு நான் முடிக்க விரும்புகிறேன்.

எங்கள் கடந்த ஆண்டின் இலக்கான ஒட்டுமொத்த ஜிடிபியை 2018ம் ஆண்டிற்குள் 2 சதவிகிதம் அதிகரிக்க வேண்டும் என்பதை இன்னும் நிறைவேற்றவில்லை.

ஜி20 அமைப்பு வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் உள்ள நாடுகள் மீது கவனம் செலுத்தி, அதில் உள்ள சிக்கல்களை நீக்கி, நாடுகளுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும்.

2014ம் ஆண்டு பிரிஸ்பேனில் முடிவெடுத்ததைப் போல, ஜி20 உட்கட்டமைப்பு வளர்ச்சி மீது கவனம் செலுத்த வேண்டும்.

சுத்தமான எரிசக்தியும், சுற்றுச்சூழலை பாதிக்காத உட்கட்டமைப்பு வளர்ச்சியும், வளர்ச்சி மற்றும் தட்பவெட்ப மாற்றம் ஆகியவற்றுக்கான தீர்வை சொல்லும்.

வளரும் நாடுகளின் உட்கட்டமைப்பு வளர்சியில் உள்ள நிதிப் பற்றாக்குறை நமது முக்கிய இலக்காக இருக்க வேண்டும்.

ஜி20யின் விவசாயத்துக்கான திட்டத்தில், சிறு பங்குதாரர்க்ள மற்றும் உணவு வீணாகுதல் குறித்து கவனம் செலுத்தப்பட்டதில் எனக்கு மகிழ்ச்சி.

பணம் செலுத்துவது, பெரும்பாலான வீடுகளுக்கு வருமானத்துக்கான முக்கியமான வழியாகவும், வளரும் நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவுவதாகவும் அமைந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் பணப் பரிமாற்றத்துக்கான அதிக செலவை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயனுள்ள விவாதங்களையும், அதன் விளைவாக சிறந்த பயன்களையும் எதிர்ப்பார்க்கிறேன்.

நன்றி.

•••••