இந்தியாவின் பிரதிநிதியாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் ஓமன் நாட்டின் பிரதிநிதியாக அந்நாட்டு போக்குவரத்து தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கும் இடையே விண்வெளியை அமைதிப் பணிகளுக்கு ஈடுபடுத்துவதற்கென மஸ்கட்டில் 2018 பிப்ரவரி மாதம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து பிரதமர் திரு.நரேந்திரமோடி தலைமையிலான அமைச்சரவையிடம் எடுத்துரைக்கப்பட்டது.
விவரங்கள் :
அமலாக்க அணுகுமுறை மற்றும் இலக்குகள்:
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூட்டுப்பணிக்குழு அமைப்பதற்கு வகை செய்கிறது இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்கான காலக்கெடு திட்டம் உருவாக்குவதிலும் அமல்படுத்துவதிலும் இந்தக் குழு பணியாற்றும்.
பலன்கள் :
மனித குலத்தின் நன்மைக்கென விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் துறையில் கூட்டுச்செயல்களை உருவாக்க இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பயன்படும். நாட்டின் அனைத்துப் பிரிவினர் மற்றும் மண்டலங்கள் இதனால் பலன் பெறும்.
தாக்கம்:
ஓமன் சுல்தானகத்துடனான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மனித குலத்தின் நன்மைக்கென விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் துறையில் கூட்டுச்செயல்களை உருவாக்க பயன்படும்.
பின்னணி :
——–