Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தங்கம் தொடர்பான திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் அளத்து குறிப்புரை

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தங்கம் தொடர்பான மூன்று திட்டங்களைத் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி புது தில்லியில் பிரதமர் இல்லம் அமைந்துள்ள எண் 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் நடைபெற்றது.

தங்கத்தை பணமாக்கிக் கொள்ளுதல், சவரன் தங்கப் பத்திரத் திட்டம், தங்க நாணயத் திட்டம் ஆகியன இத்திட்டங்களாகும்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், இத்திட்டங்கள் கேக்கின் மேலிட்ட இனிப்பான கிரீம் என வர்ணித்தார்.

இந்தியாவை ஏழைநாடு என்றழைப்பதற்கு ஒரு காரணமும் இல்லை. ஏனெனில் இங்கே 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளது என்றார் அவர். நாட்டில் உள்ள தங்கம் உற்பத்தித் திறன் உடையதாகவும் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்தார்.

இந்திய சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்தத் திட்டங்கள் இத்தகைய அதிகாரமளித்தலை வலியுறுத்துவனவாக அமையும் என்றார்.

இந்தியாவில் குடும்ப பொற்கொல்லர் பெற்றுள்ள அங்கீகாரத்தையும் நம்பிக்கையையும் பற்றி பிரதமர் விவரித்தார். இத்தகைய பொற்கொல்லர்கள் இத்திட்டங்களை நன்கு உணர்ந்து கொண்டால் அவர்களே இவற்றின் முக்கிய முகவர்களாக மாறிவிடுவர் என்றார் அவர். அசோக சக்கரம் பொறித்த தங்க நாணயம் வெளியிடப்பட்டது பற்றி குறிப்பிட்ட பிரதமர் திரு, நரேந்திர மோடி, இது தேசத்திற்கு பெருமை சேர்க்கும் என்றார். இனிமேல் மக்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட தங்க நாணயங்களையும் தங்க கட்டிகளையும் நம்பி இருக்க வேண்டியதில்லை என்றார்.

இந்தத் திட்டங்கள் தொடர்பான வலைத்தளத்தையும் பிரதமர் வெளியிட்டார். திட்டங்களில் முதலில் சேர்ந்த ஆறு முதலீட்டாளர்களுக்கு முதலீட்டுச் சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.

மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி, வர்த்தக இணை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணையமைச்சர் திரு. ஜெயந்த் சின்ஹா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.