Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

2018 காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினருக்குப் பிரதமர் பாராட்டு


2018 காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்ற இந்தியக் குழுவினருக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

2018 காமன்வெல்த் விளையாட்டுக்களில் பங்கேற்ற இந்தியக் குழுவினர், ஒவ்வொருவரையும், அதிகபட்சப் பெருமிதம் கொள்ளச் செய்திருக்கின்றனர். நமது விளையாட்டுவீரர்கள், வீராங்கனையர் மிகச் சிறப்பாக விளையாடியுள்ளனர். இந்தியாவிற்குப் பதக்கங்களைக் கொண்டு வந்திருக்கின்ற அனைத்து வீரர்கள், வீராங்கனையரை நான் பாராட்டுகிறேன்.

2018 காமன்வெல்த் விளையாட்டுக்களில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒவ்வொரு வீரரும், வீராங்கனையும் நமக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியின் உச்சத்தை அடைவதற்கு எண்ணற்றத் தடைகளை கடந்துச் சென்றதற்கு, அவர்களின் அர்ப்பணிப்பு திறன், விடாமுயற்சியெனும் மனப்பாங்கு ஆகியன அவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.

2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றியானது கூடுதலான இளைஞர்களை விளையாட்டுக்களில் ஈடுபட ஊக்கப்படுத்தும் என்றும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்துப் பெருமளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்றும் நான் நம்புகிறேன்.

அரசு என்ற முறையில், எங்களது பங்காகத் தகுதி இந்தியா இயக்கத்தை வலுப்படுத்த தேவையான அனைத்தையும் செய்துவருகிறோம்.” என்று பிரதமர் தொடர்ச்சியான டுவிட்டர் செய்திகளில் கூறியிருக்கிறார்.

****