Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான பிரதமரின் மேம்பாட்டுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் மேம்பாட்டுக்கான ரூ.80,000 கோடித் திட்டத்தை இன்று அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:

வெள்ள நிவாரணம், மறு சீரமைப்பு மற்றும் வெள்ள நிர்வாகம் – ரூ.7,854 கோடி

இதில் சேதமடைந்த வீடுகளை சீரமைப்பதற்கென மக்களுக்கு வழங்கப்படும் பண உதவி அடங்கி இருக்கும். அடிப்படை வசதி செய்து தருதல், வியாபாரிகள் மற்றும் சிறு வர்த்தகர்களுக்கு வாழ்வாதாரத்தை மீட்டுக் கொடுத்தல் ஆகியனவும் இதில் வரும். ஜீலம் மற்றும் அதன் கிளை நதிகள் வெள்ள நிர்வாகத்திற்கான விரிவானத் திட்டம், ஜீலம்-தாவி வெள்ள மறு சீரமைப்புத் திட்டம் ஆகியனவும் இதன் கீழ் வரும்.

சாலை மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள் – ரூ.42,611 கோடி

இத்திட்டத்தில் ஜோஜீலா சுரங்கப் பாதை அமைத்தல், ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் அரை வட்ட சாலைகள் அமைத்தல் மேலும் சிறந்த இணைப்பிற்கான பாரத் மாலா திட்டத்தின் கீழ் இணைப்புகளை ஏற்படுத்துதல், மாநிலத்தில் முக்கிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல் ஆகியன சேர்க்கப்படும்.

மின்சக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி – ரூ.11,708 கோடி

மின்சார அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மின் விநியோக முறைகளை மேம்படுத்துதல், சூரியஒளி மின்சக்தி, சிறிய நீர்மின்சக்தித் திட்டங்கள் ஆகியன இதன் கீழ் வரும்.

சுகாதாரம் – ரூ.4,900 கோடி

இதன் கீழ் வருபவை: அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் போன்ற இரண்டு நிறுவனங்களை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைத்தல், மருத்துவமனைகளிலும், ஆரம்ப சுகாதார மையங்களிலும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கு உதவி அளித்தல்.

மனிதவள மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் விளையாட்டுக்கள் – ரூ.2,600 கோடி

ஜம்முவில் இந்திய தொழில்நுட்பக் கழகம், இந்திய நிர்வாகவியல் கழகம் ஆகியவற்றை ஏற்படுத்துதல், ஹிமாயத் திட்டத்தின்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் விளையாட்டு அடிப்படை வசதிகளை பெருக்குதல் ஆகியன இந்தத் திட்டத்தின் கீழ் வருபவை.

விவசாயம் மற்றும் உணவு பதனீடு – ரூ.529 கோடி

இதன்படி தோட்டக்கலை துறைக்கு நிதி ஆதரவு அளிக்கப்படும். குளிர்சாதன சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

சுற்றுலா – ரூ.2,241 கோடி

இதில் புதிய திட்டங்கள், புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 50 சுற்றுலா கிராமங்கள் அமைப்பது ஆகியன அடங்கும்.

நகர மேம்பாடு – ரூ.2,312 கோடி

அதிநவீன நகரம் அமைத்தல், தூய்மை இந்தியா இயக்கம் திட்டங்களின் கீழ் வரும் தொகைகளும் ஜம்மு காஷ்மீரில் நகரங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கான தொகைகளும் இதில் அடங்கும்.

இடம் பெயர்ந்த மக்களின் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் – ரூ.5,263 கோடி

காஷ்மீர் புலம் பெயர்ந்தோருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருதல், சாம்ப், மற்றும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் ஆகியவற்றை சேர்ந்த குடும்பத்தினருக்கு மறுவாழ்வுத் திட்டங்கள், வீடுகள் கட்டுதல், இந்திய ரிசர்வ் படைப் பிரிவுகள் 5 உருவாக்குதல் ஆகியன இதில் வரும். இந்திய ரிசர்வ் படைப்பிரிவு ஜம்மு காஷ்மிரைச் சேர்ந்த 4000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

பஷ்மினா மேம்பாட்டுத் திட்டம் – ரூ.50 கோடி

மொத்த உதவித் திட்டம் – ரூ.80,068 கோடி

பிரதமர் தேசிய நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.837 கோடி, சென்ற ஆண்டு வெள்ளப் பாதிப்புக்கு என மாநிலத்துக்கு வழங்கப்பட்ட ரூ.1,000 கோடி போன்ற ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்ட தொகைகளுக்கும் கூடுதலாக இந்த தொகை அறிவிக்கப்படுகிறது.

*****