Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமர் மோடிக்கு ஒபாமா தீபாவளி வாழ்த்து


அமெரிக்க அதிபர் திரு. பராக் ஒபாமா புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹாட்லைன் இணைப்பு மூலம் பிரதமர் திரு. நரேந்திர மோடியை அழைத்து பேசினார். அப்போது இரு தலைவர்களும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

“சற்று முன் அமெரிக்க அதிபர் அழைத்திருந்தார். நாங்கள் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டோம். புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஹாட்லைன் இணைப்பு மூலம் நாங்கள் இருவரும் முதல் முறையாக பேசிக்கொண்டோம்.

நானும் அதிபர் ஒபாமாவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதித்தோம். வெள்ளை மாளிகை எவ்வாறு தீபாவளியை கொண்டாடுகிறது என்பதை அறிய மகிழ்ச்சியாக இருந்தது.

துருக்கியில் நடக்கவுள்ள ஜி-20 மாநாட்டில் சந்திப்பதற்காக நானும் அதிபர் ஒபாமாவும் காத்திருக்கின்றோம்.” என்று பிரதமர் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.