சீன துணை அதிபர் திரு. லீ யுவன்சோ பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, கடந்த ஆண்டு சீன குடியரசுத் தலைவர் சி ஜின்பிங் இந்தியாவிற்கு வந்திருந்தது பற்றியும் தான் சீனாவிற்கு பயணம் கொண்டது பற்றியும் பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.
இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி ரீதியான நட்புறவு பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளதாக பிரதமர் தெரிவித்தார். ரயில்வே, ஸ்மார்ட் நகரங்கள், உட்கட்டமைப்பு மற்றும் நகர்ப்புற போக்குவரத்து என பல்வேறு துறைகளில் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே கூட்டுறவு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பிரதமர் கூறியுள்ளார்.
சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் முதலீடு அதிகரித்துள்ளதை பிரதமர் வரவேற்றார். இந்தியாவிற்கு வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா சீனாவிற்கு இடையே உள்ள பாரம்பரிய உறவு இரு நாட்டு மக்களிடையே உள்ள உறவை வலுப்படுத்த உதவியாகவுள்ளது.
உலக அமைதிக்கும் ஆசிய கண்டத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கும் இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையே நிலையான உறவு அவசியம் என்றும் இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
Discussed India-China cooperation in economy, infrastructure & culture during my meeting with VP, Mr. Li Yuanchao. https://t.co/rQboFTxJiw
— Narendra Modi (@narendramodi) November 6, 2015