Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தில்லி வெஸ்டர்ன் கோர்ட் வளாக இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

தில்லி வெஸ்டர்ன் கோர்ட் வளாக இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

தில்லி வெஸ்டர்ன் கோர்ட் வளாக இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்

தில்லி வெஸ்டர்ன் கோர்ட் வளாக இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திறந்து வைத்தார்


புதுதில்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள வெஸ்டர்ன் கோர்ட் வளாகத்தின் இணைப்புக் கட்டிடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்தக் கட்டிடம் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடைத்தங்கல் வசதிக்காக கட்டப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த திட்டம் நிறைவடைவதற்கான முயற்சிகளை மேற்கொண்ட மக்களவைத் தலைவர் திருமதி சுமித்ரா மகாஜனுக்கு பாராட்டு தெரிவித்தார். திருமதி சுமித்ரா மகாஜன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நலனில் எப்போதும் விருப்பம் கொண்டவர் என அவர் மேலும் கூறினார். இந்த திட்டத்தின் மீது அவர் காட்டிய ஆர்வம் அவரது இரக்க குணத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் குறிப்பிடப்பட்ட கால அவகாசம் மற்றும் செலவுக்குள் முடிக்கப்பட்டிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். இந்த திட்டத்தை நிறைவு செய்வதில் ஈடுபட்ட அனைவருக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுதிகளில் தங்க வேண்டியுள்ளது என்றும் இது தலைப்பு செய்தியாகி விடுகிறது என்றும் பிரதமர் கூறினார். நாடாளுமன்ற விடுதியில் முன்பு தங்கி இருந்தவர்கள் குறிப்பிடப்பட்ட காலத்திற்கு பிறகும் கூட அதனை காலி செய்யாமல் இருப்பது கவனிக்கப்படாமல் போகிறது என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு டாக்டர் பாபா சாஹேப் அம்பேத்கர் காட்டிய பாதையில் சென்று கொண்டிருப்பதாக பிரதமர் உறுதிபட தெரிவித்தார். ஒற்றுமை மற்றும் நல்லிணக்கம் என்பது டாக்டர் அம்பேத்கரது சிந்தனையின் மையமாக இருந்தது. ஏழ்மையிலும் ஏழ்மையுடன் வாழ்பவர்களுக்காக பணியாற்றுவதே அரசின் நோக்கம் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாபா சாஹேப் அம்பேத்கரின் நினைவை போற்றும் வகையில் அவர் கடைசியாக வாழ்ந்த 26, அலிப்பூர் சாலை, புதுதில்லி வீடு அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 13ம் தேதி நினைவிடமாக திறந்து வைக்கப்படும் என பிரதமர் அறிவித்தார். டாக்டர் அம்பத்கர் பெயரை வைத்து சிலர் அரசியல் விளையாட்டில் ஈடுபடுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.

***