இரட்டை வரி விதிப்பை தவிர்க்கவும், வரிஏய்ப்பை தடுக்கவும் வருமானவரி தொடர்பாக இந்தியா-கத்தார் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இரட்டை வரி விதிப்பை தடுப்பதற்காக கத்தார் நாட்டுடனான ஒப்பந்தம் 1999-ம் ஆண்டு ஏப்ரல் 7-ந் தேதி கையெழுத்தாகி 2000-வது ஆண்டு ஜனவரி 15-ல் நடைமுறைக்கு வந்தது. மற்றொரு நாட்டில் கிடைக்கும் வருவாயை மறைப்பதை தடுக்கவும், இதர ஒப்பந்த விதிகளுக்கு இணையாக இருக்கவும் இரண்டு நாடுகளும் இது பற்றிய அண்மை தகவல்களை பகிர்ந்துக் கொள்வதற்கு ஆய்வு செய்யப்பட்ட ஒப்பந்தம் வகை செய்கிறது. ஜி-20 நாடுகளுடன் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தின் 6-வது விதிகளை பயன்படுத்தி வருவாயை மறைக்காமல் தடுப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச தகுதியை மறு ஆய்வு செய்யப்பட்ட ஒப்பந்தம் நிர்ணயிக்கிறது.
Cabinet clears India-Qatar double taxation avoidance treaty. https://t.co/LEbGoculuA
— PMO India (@PMOIndia) March 22, 2018
via NMApp pic.twitter.com/yKQwzCllpk