Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சுரங்கங்களில் இருந்து கனிம பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு வெட்டி எடுப்பது மற்றும் தரம் உயர்த்துவது தொடர்பாக இந்தியா ஜோர்டான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜோர்டான் நாட்டில் பாஸ்பாரிக் அமிலம், டி.ஏ.பி, மற்றும் என்.பி.கே உரம் உள்ளிட்டவைக்கான உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை சுரங்கங்களில் இருந்து கனிம பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் குளோரைடு வெட்டி எடுப்பது மற்றும் தரம் உயர்த்துவது தொடர்பாக இந்தியா ஜோர்டான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. ஜோர்டான் நாட்டில் பாஸ்பாரிக் அமிலம், டி.ஏ.பி, மற்றும் என்.பி.கே உரம் உள்ளிட்டவைக்கான உற்பத்தித் தொழிற்சாலை தொடங்கவும் இவற்றை இந்தியா 100 % கொள்முதல் செய்யவும் இந்த நீண்டகால ஒப்பந்தம் வகை செய்கிறது.

இதற்குத் தேவையான மூலப் பொருட்களையும், பிற பொருட்களையும் தொடர்ச்சியாக வழங்குவதையும், நாட்டின் தேவைக்கு ஏற்ப அங்கு தயாரிக்கப்படும் பொட்டாசியம் மற்றும் பாஸ்பேட் உரங்களை நியாயமான விலையில் கொள்முதல் செய்வதையும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் உறுதி செய்யும்.

****