Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டின்போது ஆப்பிரிக்க தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு சந்திப்பு

புது தில்லியில் நடைபெறும் இந்தியா ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டின்போது ஆப்பிரிக்க தலைவர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஜிம்பாப்வே நாட்டின் அதிபரும் ஆப்ரிக்க கூட்டமைப்பின் தலைவருமான திரு. ராபர்ட் முகாபேவை சந்தித்து பேசினார். ஐ.நா. சீர்திருத்தம், தீவிரவாதத்தின் அச்சுறுத்தல் உட்பட இரு தரப்பிற்கும் பொதுவான பல தலைப்புகள் பற்றி இருவரும் பேசினர்.

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே இடையே உள்ள இருதரப்பு உறவு பற்றி பிரதமர் எடுத்து கூறினார். அதிபர் முகாபே இந்தியா ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டின் இணைத்தலைவர் ஆவார். இரு தலைவர்களும் உச்சி மாநாட்டின் ஏற்பாடுகள் குறித்தும் விவாதித்தனர்.

கானா நாட்டின் அதிபர் திரு. ஜான் திரமணி மகாமாவை பிரதமர் மோடி சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே உள்ள நட்புறவு, வளர்ந்து வரும் இருதரப்பு வர்த்தகம் ஆகியவை இவர்களின் விவாதத்தில் இடம்பிடித்தன. வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், திறன் மேம்பாடு, இணைய பாதுகாப்பு, கடல்சார் துறை பாதிகாப்பு ஆகிய துறைகளில் இருநாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு அதிகரிக்கலாம் என்ற தங்களது கருத்துக்களை பரிமாறினர்.

சுவாசிலாந்து மன்னரான மூன்றாவது எச்.இ. மிஸ்வதியை பிரதமர் சந்தித்தார். உட்கட்டமைப்பு, புதுபிக்கத்தக்க எரிசக்தி, திறன் மேம்பாடு உள்ளிட்ட தனது நாட்டின் வளர்ச்சி குறித்த தனது கண்ணோட்டத்தை மன்னர் எடுத்துரைத்தார். மன்னரின் எண்ணங்களை பாராட்டிய பிரதமர் அந்நாட்டின் வளர்ச்சிக்கு இயன்றவரையிலான உதவியை இந்தியா அளிக்கும் என்று உறுதி அளித்தார்.

பெனின் அதிபர் டாக்டர். போனி யாயியை பிரதமர் திரு மோடி சந்தித்தார். இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் பொருளாதார உறவு, வேளாண்மை, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நைஜீரியா அதிபர் திரு. முகமது புஹாரியை பிரதமர் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது நடந்த விவாதத்தில் எண்ணெய் வளம் கண்டறிதல், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு, ஐ.நா. சீர்திருத்தம் ஆகியவை இடம் பெற்றன

கென்யா அதிபர் திரு. உஹுரு கென்யட்டாயும் பிரதமர் மோடியும் சந்தித்தபோது சுகாதாரத்துறை, உட்கட்டமைப்பு, வர்த்தகம் குறித்த தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையே உள்ள உறவு மற்றும் கென்யாவில் வாழும் இந்தியர்கள் பற்றியும் குறிப்பிட்டனர். தீவிரவாதம், ஐ.நா சீரமைப்பு குறித்தும் விவாதித்தனர்.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமாவை பிரதமர் சந்தித்தார். இரு நாடுகளுக்கு இடையே உள்ள வரலாறு சிறப்பு மிக்க உறவினை இரு நாட்டு தலைவர்களும் நினைவுகூர்ந்தனர். தீவிரவாதம், ஐ.நா. பாதுகாப்பு குழு சீரமைப்பு போன்ற பிரச்சினைகள் குறித்து இருவரும் பேசினர்.

உகாண்டா அதிபர் திரு. யோஹெறி முசிவேனியை பிரதமர் சந்தித்தார். இருநாடுகளின் வளங்கள் மற்றும் உறவினை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.