Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் 


மர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை (என்.என்.எம்), 2017 – 18 முதல் மூன்று ஆண்டு காலத்துக்கு ரூ.9046.17 கோடி ஒதுக்கீட்டில் உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அம்சங்கள் :

  1. ஊட்டச்சத்து தொடர்பான திட்டங்களை கண்காணித்தல், மேற்பார்வை செய்தல், இலக்கு நிர்ணயித்தல், வழிகாட்டுதல் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையே தகவல் அளித்தல் செய்யும் உயர்ந்தபட்ச இயக்கமாக என்.என்.எம். இருக்கும்.
  2. இந்த முன்மொழிவில் அடங்கும் விஷயங்கள்
  • ஊட்டச்சத்து குறைபாட்டைத் தீர்ப்பதற்கு பங்களிப்பு செய்யும் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைப்பு செய்தல்
  • மிகவும் துடிப்பான ஒருங்கிணைப்பு நடைமுறையை அறிமுகம் செய்தல்
  • உடனுக்குடன் கண்காணித்தலுக்கு கணினி அடிப்படையிலான அணுகுமுறை
  • இலக்குகளை எட்டுவதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு ஊக்கத்தொகை அளித்தல்
  • IT அடிப்படையிலான வசதிகளைப் பயன்படுத்துவதற்கு அங்கன்வாடி ஊழியருக்கு (AWW-கள்) ஊக்கத்தொகை அளித்தல்
  • AWW-கள் பயன்படுத்தும் பதிவேடுகளை நீக்குதல்
  • அங்கன்வாடி மையங்களில் (AWC-கள்) குழந்தைகளின் உயரத்தை அளத்தல்
  • சமூக தணிக்கைகள்
  • பல்வேறு செயல்பாடுகள் மூலமாக ஊட்டச்சத்து அதிகரிப்பில் மக்களின் பங்கேற்புக்காக, ஜன் அந்தோலன் மூலமாக அவர்களின் ஈடுபாட்டுடன்,  ஊட்டச்சத்து ஆதாரவள மையங்கள் அமைத்தல்.

பெரிய தாக்கம் :

 இலக்குகளுடன்  இந்த இயக்கத்தை செயல்படுத்தும்போது வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாமை,  ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை, பிறப்பின் போது எடை குறைந்த குழந்தைகள் ஆகியவற்றின் அளவைக் குறைக்கும் முயற்சியாக அமையும். ஒருங்கிணைப்பை இது உருவாக்கி, நல்ல கண்காணிப்பை உறுதி செய்து, குறித்த காலத்தில் நடவடிக்கை எடுக்க எச்சரிக்கை செய்வது,, செயல்படுவதற்கு மாநிலங்கள் / யூனியன்  பிரதேசங்களை ஊக்குவிப்பது, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டுவதற்கு தொடர்புடைய அமைச்சகங்கள் மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டி மேற்பார்வை செய்யவும் உதவியாக இருக்கும்.

பயன்கள் & செயல் வரம்பு

இந்தத் திட்டத்தால் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பயன்பெறுவார்கள். படிப்படியாக அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களும் திட்டத்தின் செயல்வரம்புக்குள் கொண்டு வரப்படும். அதாவது 2017 – 18ல் 315 மாவட்டங்கள், 2018 – 19ல் 235 மாவட்டங்கள் மற்றும் 2019-20ல் மீதியுள்ள மாவட்டங்களில் திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டச் செலவினம்:

2017-18ல் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கு ரூ. 9046.17 கோடி செலவு செய்யப்படும். இது அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு (50%) மற்றும் IBRD அல்லது மற்ற MDB-யால்  50% அளிக்கப்படும். அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு மத்திய மற்றும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இடையே 60:40 என்ற விகிதத்திலும், வடகிழக்கு பிராந்தியம் மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 90:10 என்ற விகிதத்திலும், சட்டப்பேரவைகள் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100% ஆகவும் இருக்கும். மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசின் பங்கு ரூ. 2849.54 கோடியாக இருக்கும்.

செயல்படுத்தல் அணுகுமுறை மற்றும் இலக்குகள்:                             

தீவிர கண்காணிப்பு அடிப்படையிலும், அடிமட்ட அளவு வரையில் ஒருங்கிணைந்த செயல் திட்டம் என்ற வகையிலும் செயல்படுத்தல் அணுகுமுறை இருக்கும். 2017 – 18 முதல் 2019 – 20 வரையில் மூன்று தவணைகளாக என்.என்.எம்.  செயல்படுத்தப்படும். வயதுக்கேற்ற வளர்ச்சியின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை (இளம் குழந்தைகள், பெண்கள் மற்றும் வளர் இளம் பருவ பெண்கள் மத்தியில்) மற்றும் பிறப்பின் போது குழந்தைகள் எடை குறைவாக இருத்தலை, ஆண்டுக்கு 2%, 2%, 3% மற்றும் 2% என அந்தந்த ஆண்டுகளுக்கு குறைப்பதை என்.என்.எம். இலக்காகக் கொண்டுள்ளது. வயதுக்கேற்ற வளர்ச்சியின்மையை ஆண்டுக்கு குறைந்தது 2% குறைக்க வேண்டும் என்பது இலக்காக இருந்தாலும், போதிய வளர்ச்சியின்மையை 38.4% (NFHS-4) -ல் இருந்து 2022 க்குள் 25% ஆக (2022க்குள் இலக்கு 25) குறைக்க இத் திட்டம் தீவிர முயற்சிகளை எடுக்கும்.

 பின்னணி :

 குழந்தைகள் (0-6 வயது வரை உள்ளவர்கள்) மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களின் ஊட்டச்சத்து அளவை நேரடியாக/மறைமுகமாகப் பாதிக்கும் வகையில் நிறைய திட்டங்கள் உள்ளன. இருந்தபோதிலும், ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் அதுதொடர்பான பிரச்சினைகள் நாட்டில் அதிகமாக உள்ளன. திட்டங்களுக்கு குறைவு ஏதும் இல்லை. ஆனால் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தி, பொதுவான இலக்கை எட்டுவதில் ஒன்றுடன் ஒன்றுக்கு தொடர்பை ஏற்படுத்துவதில் குறைபாடு காணப்படுகிறது. ஊக்கம் நிறைந்த ஒருங்கிணைப்பு நடைமுறை மூலமாகவும், மற்ற செயல்பாடுகள் மூலமாகவும் இந்த ஒருங்கிணைப்பை NNM உருவாக்கும்.

*****