Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை

இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை

இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு (15, ஜனவரி, 2018) வருகை தருவதையொட்டி பிரதமர் வெளியிட்டஅறிக்கை


மேதகு பிரதமர் திரு பென்சமின் நேதன்யாஹூ அவர்களே,

ஊடக நண்பர்களே,

இந்தியாவுக்கு முதன்முறையாக வருகை தரும் இஸ்ரேல் பிரதமர் திரு. நேதன்யாஹூ  அவர்களை வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

येदीदीहायाकर, बरूख़िमहाबायिमलेहोदू!

(என் இனிய நண்பரே, இந்தியாவுக்கு வருக வருக என்று வரவேற்கிறேன்)

(இஸ்ரேல்) பிரதமர் அவர்களே, உங்களது இந்த வருகை, இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான நட்புப் பயணத்தில் நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்டு வந்ததாகும்.

உங்களது வருகை இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ராஜீய நல்லுறவுகளின் 25 ஆண்டுகால நினைவுகளுக்குப் பொருத்தமான நிகழ்வாகும்.

2018ஆம் ஆண்டில் எங்கள் நாட்டுக்கு வருகை தரும் முதல் கவுரவமிக்க விருந்தினர் என்ற முறையில், உங்களது வருகை புத்தாண்டில் ஒரு சிறப்பான தொடக்கமாகும். இளவேனில் (வசந்தம்) காலம், புதுமையாக்கம், புதிய நம்பிக்கை, பலன்கள்  தொடங்குவதையும் இந்தியா முழுதும் உள்ள மக்கள் கொண்டாடும் மங்கலகரமான காலத்தில் தங்களது வருகை அமைந்துள்ளது. இந்தியாவின் பன்முகக் கலாசாரத்தையும் ஒன்றுபட்ட தன்மையையும் வகையில் பல பகுதிகளில் லோரி, பிஹு, மகர சங்கராந்தி,  பொங்கல் திருநாள் எனக் கொண்டாடப்படுகின்றன.

நண்பர்களே,

கடந்த ஆண்டு ஜூலையில் நாட்டின் 125 கோடிப் பேரின் வாழ்த்துகள், நட்பு ஆகியவற்றை ஏந்திக்கொண்டு இஸ்ரேலுக்கு விஜயம் செய்தேன். இஸ்ரேல் மக்களின் தாராளமான அன்பையும் இதமான வரவேற்பையும் கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்.

அந்தப் பயணத்தின்போது, பிரதமர் நேதன்யாஹூ – வும் நானும் எங்களுக்கும் எங்களது மக்களுக்கும் ராஜீய கூட்டாண்மையை அமைப்பதற்கான உறுதியை அளித்தோம். அவை நம்பிக்கை, எதிர்பார்ப்பு மற்றும் பன்முகத் தன்மையுடன் கூடிய முன்னேற்றம், தரமான, திறமான ஒத்துழைப்பு, கூட்டு முயற்சி, இருதரப்பு வெற்றிகள் ஆகியவற்றைச் சார்ந்தவை ஆகும். அத்தகைய உறுதி இரு தரப்பினருக்கும் இடையில் பல நூற்றாண்டுகள் உள்ள இயல்பான அன்பு, நட்பு ஆகியவற்றிலிருந்து அமைந்துள்ளது. இயல்பான அன்பும் நட்பும்  எல்லா துறைகளிலும் இரு தரப்பினரும் வெற்றி அடைவதற்கு உதவும் வகையிலானதாகும்.

எனது அந்த வருகைக்குப் பிறகு ஆறு மாதம் கழித்து இந்தியாவுக்குத் தாங்கள் மேற்கொள்ளும் மிகச் சிறப்பு மிக்க வருகை நமது லட்சியம், அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பகிர்வதற்கான நடவடிக்கைகளாகும்.

இன்றும் நேற்றும் பிரதமர் நேதன்யாஹூ – வும் நானும்  இரு தரப்புக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள  முன்னேற்றம் குறித்து மறு ஆய்வு செய்தோம், பின்பற்றப்பட வேண்டிய நமக்கு வழிகாட்டக் கூடிய சாதகங்கள், வாய்ப்புகள் குறித்த விவாதத்தையும் புதுப்பித்துக் கொண்டோம்.

எங்களது விவாதங்கள் பரந்த மற்றும் தீவிரமானவை. மேலும் அவற்றை மேலும் செயல்படுத்த வேண்டும் என்ற ஆவலையும் வெளிப்படுத்துகின்றன.

பிரதமர் அவர்களே, எல்லா செயல்பாடுகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதில் அவசரம் காட்டுபவன் என்ற பெயரைப் பெற்றிருக்கிறேன்.

ஒரு ரகசியத்தைச் சொல்ல வேண்டுமானால், நீங்களும் அப்படித்தான் என்பதை அறிவேன்.

அதிகார வர்க்கத்தின் மெத்தனச் செயல்பாட்டைக் குறைத்து, வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்கிற வகையில் முடிவெடுப்பது, விரைந்து செயல்படவேண்டும் என்ற உங்களது குறிக்கோளை நீங்கள் டெல் அவிவ் நகரில் கடந்த ஆண்டு என்னிடம் வெளிப்படுத்தினீர்கள்.

பிரதமர் அவர்களே, இந்தியாவில் நாங்கள் எந்தச் செயலையும் அப்படி அப்படியே செய்வதில் வல்லவர்கள். முன்பு எடுத்த முடிவுகளைச் செயல்படுத்துவதில் எப்படி அவசரம் காட்டுவோம் என்பதையும் பரஸ்பரம் தெரிவித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான பலன்கள் கண்முன்னே தெரிகின்றன. நமது செயல்பாடுகளை உத்வேகப்படுத்தும் வகையிலும் கூட்டாண்மையை அதிகரிக்கும் வகையிலும் நமது விவாதங்கள் இன்று அமைந்துள்ளன.

இவற்றை மூன்று விதங்களில் செயல்படுத்துவோம்:

முதலில், நமது மக்களுடன் வாழ்க்கையோடு தொடர்புள்ள பகுதிகளில் ஒத்துழைப்பதற்காகத் தற்போதுள்ள உறுதி நிலைகளை வலுப்படுத்துவோம். அவை வேளாண்மை, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பாதுாகாப்பு ஆகும்.

இஸ்ரேலில் கடைப்பிடிக்கப்படும் மேம்பட்ட நடைமுறைகள், தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கொண்டுவருவதன் மூலம் வேளாண்மைக்கான ஒத்துழைப்பில் முக்கியம் தேவைப்படும் சீருயர் மையங்களை வலுப்படுத்துவது குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டோம்.

பாதுகாப்புத் துறையைப் பொறுத்த வரையில், நேரடி அந்நிய முதலீட்டு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலிய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு இந்தியாவில் எங்களது நிறுவனங்களுடன் உற்பத்தியில் ஈடுபடவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இரண்டாவதாக, எண்ணெய்-எரிவாயு, சைபர் பாதுகாப்பு (இணையப் பாதுகாப்பு), திரைப்படங்கள் போன்ற இன்னும் தொடத துறைகளில் ஈடுபடுகிறோம். தற்போது கையெழுத்தான உடன்பாடுகளில் இது பிரதிபலிக்கும் என்பதை நீங்கள் காணப் போகிறீர்கள். பன்முகத்தைக் காண்பதற்கான நமது விருப்பத்தையும் விரிவுபட்ட அடித்தளத்தையும் குறிப்பிடுகின்றன.

மூன்றாவதாக, இரு தரப்பு நாடுகளிலிருந்தும் பரஸ்பரம் நிபுணர்களையும் சிந்தனைகளையும் பகிர்ந்துகொள்ள வசதி செய்வதையும் உறுதிப்படுத்துகிறோம். இது கொள்கைக்கும், கட்டுமானத்துக்கும், தொடர்புக்கும், அரசையும் கடந்து உதவுவதற்குத் தேவையாகும்.

நமது மக்கள் இஸ்ரேலுக்குச் செல்வதற்கும், அங்கு நீண்ட நேரம் பணிபுரியவும் வசதிகள் எளிதாக அமையும் விதத்தில் சூழல் அமைவதற்கு வழிகாண இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுகிறோம். இரு தரப்பு மக்களையும் நெருக்கமாக்குவதற்காக இந்திய கலாசார மையம் இஸ்ரேலில் விரைவில் தொடங்கப்படும்.

இளைஞர்கள் அறிவியல் சார்ந்த கல்விக் கூடங்களிலிருந்து இரு தரப்பிலிருந்தும் ஆண்டுதோறும் பரஸ்பரம் நூறு இளைஞர்களை பரிமாறிக் கொள்ளவும் முடிவு செய்துள்ளோம்.

நண்பர்களே,

ஒரு வலுவான கூட்டாண்மைக்கு வெற்றிகரமான இரு தரப்பு வர்த்தகமும் முதலீடும் நமது தொலைநோக்கின் ஒருங்கிணைந்த அம்சமாகும்.  பிரதமர் திரு. நேதன்யாஹூ – வும் நானும் இந்தப் பாதையில் நிறைய செய்யவேண்டும் என்பதில் உடன்பாடு கண்டிருக்கிறோம். கடந்த ஆண்டு டெல் அவிவ் நகரில் நடந்த சந்திப்பை அடுத்து, இரு தரப்பு அமைப்பின் கீழ், இரண்டாவது முறையாக இரு தரப்பு நிறுவனங்களின் தலைவர்களுக்காக விவாதம் நடத்துவோம்.

பிரதமர் திரு. நேதன்யாஹூ  தன்னுடம் கொண்டுவந்துள்ள மிகப் பெரிய வர்த்தகக் கூறுகளைக் கொண்டு வந்துள்ளார். அதை வரவேற்கிறேன். பிரதமர் நேதன்யாஹூ – வும் நானும் மண்டல அளவிலான மற்றும் உலகளாவிய நிலைமைகள் குறித்த பார்வைகளையும் பகிர்ந்துகொண்டோம்.

அத்துடன், எங்களது மண்டலத்திலும் உலக அளவிலும் ஸ்திரத்தன்மையும் அமைதியும் நிலவுவதற்காக நாங்கள் எங்களது ஒத்துழைப்பு குறித்து ஆய்வு செய்தோம்.

நண்பர்களே,

இஸ்ரேலில் நடந்த ஹைஃபா போரில் நூறு ஆண்டுகளுக்கு முன் உயிர்நீத்த தீரம் மிக்க இந்திய வீரர்களுக்காக அமைந்துள்ள தீன் மூர்த்தி ஹைஃபா சதுக்கத்தில் பிரதமர் நேதன்யாஹூ  அஞ்சலி செலுத்தினார். அதுவே, பிரதமர் நேதன்யாஹூ  இந்திய மண்ணை மிதித்ததும் முதல் வேலையாகும்.

இரு நாடுகளும் நமது வரலாறுகளையும் வீரர்களையும் எப்போதும் மறக்கவில்லை. பிரதமர் நேதன்யாஹூ வின் நல்லெண்ணத்தைப் பாராட்டுகிறோம். இஸ்ரேலுடன் கொண்டுள்ள ஒத்துழைப்பைப் பார்க்கும்போது என் மனம் நம்பிக்கை, பிரகாசமான சாதகச் சூழலையும் நிரம்ப காண்கிறேன். அதைப் போல் இந்திய – இஸ்ரேல் ஒத்துழைப்பை மேலும் பல உயரத்துக்கு எடுத்துச் செல்வதில் எனக்கு இணையான அர்ப்பணிப்பு கொண்டுள்ளவராக பிரதமர் நேதன்யாஹூ வைக் காண்கிறேன்.

நிறைவாக, பிரதமர் நேதன்யாஹூ  அவர்களே நாளை மறுநாள் எனது தாய்மண்ணான குஜராத்தில் உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு பெற்றதற்கு நான் பெருமிதம் அடைகிறேன்.

வேளாண்மை, தொழில்நுட்பம், புதுமையாக்கம் ஆகியவற்றில் பரஸ்பரம் ஒத்துழைப்பு கொண்டிருப்பதில் மேற்கொண்டுள்ள உறுதியை நிறைவேற்றுவதைக் காணப் போகிறோம்.

பிரதமர் திரு. நேதன்யாஹூ, திருமதி நேதன்யாஹூ, மற்றும் இஸ்ரேல் குழுவினர் இந்தியாவில் நினைவில் நிற்கக் கூடிய  இனிய அனுபவத்தைக் காணவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

மிக்க நன்றி! டோடா ரபா!

 

*******