Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் மற்றும் உற்சாகம் நிறைந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.

ராஜஸ்தான் மாநில முதல்வர் திருமதி வசுந்தரா ராஜே மற்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் ஆகியோரை பாராட்டிய பிரதமர், கடந்த சில தினங்களுக்கு முன் நாடு மகர சங்கராந்தி விழாவை பெரும் உற்சாகத்துடன் கொண்டாடியதை நினைவு கூர்ந்தார். இந்தப் பண்டிகைப் பருவம் வளத்திற்கான தூண்டுதல் எனக் குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில், இந்த பண்டிகைக் கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக பலரது வாழ்வில் மகிழச்சியையும் வளத்தையும் திட்டத்திற்காக தாம் ராஜஸ்தான் வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி அடைவதாக்க் குறிப்பிட்டார்.

இந்தத் தருணம் காரியங்கள் சித்தி அடைவதற்கான உறுதிமோழி ஏற்கும் தருணம் என்றும் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் 2022ம் ஆண்டுக்குள் நமது இலக்குகளை அடையாளம் கண்டு அவற்றை அடைவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வரும் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவருமான திரு. பைரோன் சிங் ஷெகாவத்தை நினைவுகூர்ந்த பிரதமர், ராஜஸ்தானை நவீனமயமாக்க அவர் பணியாற்றியதாக கூறினார். முன்னாள் மத்திய அமச்சரும் மூத்த தலைவருமான திரு. ஜஸ்வந்த் சிங் நமது நாட்டிற்கு அளித்துள்ள பங்களிப்புகளை நினைவுகூர்ந்த பிரதமர் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் தெரிவித்தார்.

வறட்சி நிலையை சமாளிக்கவும் இந்த கடுமையான சூழ்நிலையைச் சமாளிக்கவும் உதவிய ராஜஸ்தான் அரசு மற்றும் முதல்வர் திருமதி வசுந்தரா ரஜேவுக்கு பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ராணுவப் படையினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது எனக் குறிப்பிட்ட பிரதமர், இதனைச் சாத்தியமாக்க அரசு பாடுபட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.

மக்கள் நிதித் திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், ஏழைகள் தற்போது வங்கிச் சேவைகளை அணுக முடிந்திருப்பதாக அவர் தெரிவித்தார். சமையல் எரிவாயுவுக்கான உஜ்வலா திட்டம் பற்றிக் குறிப்பிட்ட அவர், மின்சார வசதி இல்லாத 18,000 கிராமங்களுக்கு மின்சாரம் அளிப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் பயன் அடைவது மற்றும் முன்னேற்றம் காண்பதில் முதல்வர் வசுந்தரா ராஜேவின் உறுதிப்பாட்டைப் பிரதமர் பாராட்டினார்.

***