Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெருந்துறைமுகங்களில் அரசு-தனியார் பங்களிப்பு திட்டங்களுக்கான திருத்தப்பட்ட மாதிரி சலுகை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ் கூடிய மத்திய அமைச்சரவை, துறைமுகங்கள் துறையில், பெருந்துறைமுகங்கள் மேலும் முதலீடுகளை கவரும் வண்ணமும், முதலீட்டிற்குகந்த சூழ்நிலையை உருவாக்கும் வகையிலும், மாதிரி சலுகை ஒப்பந்தத்தில் (எம்.சி.ஏ.) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு ஒப்புதல் வழங்கியது.

சிறப்பு அம்சங்கள்:

நெடுஞ்சாலைத் துறையில் உள்ளது போன்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரச்சினைகளுக்கு அணுகக்கூடிய தீர்வுச் சங்கம் – துறைமுகங்கள் (எஸ்.ஏ.ஆர்.ஓ.டீ.-போர்ட்ஸ்) ஏற்படுத்திட மாதிரி சலுகை ஒப்பந்தத்தில் (எம்.சி.ஏ.) மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் வழிசெய்யும்.

திருத்தப்பட்ட மாதிரி சலுகை ஒப்பந்தத்தின் (எம்.சி.ஏ.)  மற்ற சிறப்பம்சங்கள் கீழ்க்கண்டவாறு :-

  1. வணிகரீதியான செயல்பாட்டு தேதியிலிருந்து 2 ஆண்டுகள் முடிவுற்ற பின்பாக, 100% பங்கிற்கான முதலீட்டை திரும்ப பெற்று மேம்பாட்டாளர்கள் வெளியேற வழி செய்கிறது. இது நெடுஞ்சாலைத் துறையில் தற்போதுள்ள எம்.சி.ஏ. பிரிவுகளுக்கு ஒப்பானதாகும்.
  2. சலுகையாளர்களுக்கான கூடுதல் நிலம் அளிக்கும் பிரிவின் கீழ், வழங்கப்படவுள்ள கூடுதல் நிலத்திற்கான விலையின் 200%-லிருந்து 120%ஆக நில வாடகை குறைக்கப்பட்டுள்ளது.
  • சலுகையாளர்கள் “கையாளப்படும் சரக்கு/டி.இ.யு. மெ.டன் ஒன்றிற்கு” என்ற அடிப்படையில் ராயல்டித் தொகை செலுத்த வேண்டும். அது வருடாந்திர மொத்த விற்பனை விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு உட்பட்டதாக இருக்கும். இது தற்போது ஏலத்தின்போது, பெருந்துறைகளுக்கான கட்டண ஆணையத்தால் (டி.ஏ.எம்.பி.) நிர்ணயிக்கப்பட்ட முன்னறிவிக்கப்பட்ட நெறிமுறை கட்டண விகிதத்தின் அடிப்படையில், கணக்கிடப்பட்ட ஒட்டுமொத்த வருவாய்க்கு சமமான சதவீதத்திலான ராயல்டியை வசூலிக்கும் நடைமுறையை மாற்றும். அரசு-தனியார் பங்களிப்பு (பி.பி.பி.) செயற்பாட்டாளர்களின், நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையில் வருவாய் பங்கு செலுத்தப்பட வேண்டும் மற்றும் விலை தள்ளுபடிகள் புறந்தள்ளப்படுகிறது என்பன போன்ற நீண்ட கால புகார்களுக்கு தீர்வு காண இது உதவும். பல்வேறு திட்டங்களுக்கு பாதிப்பை உண்டாக்கிய, டி.ஏ.எம்.பி.யால் நிர்ணயிக்கப்பட்ட சேமிப்பு கிட்டங்கி கட்டணங்கள் மற்றும் சேமிப்பு கிட்டங்கி கட்டணங்களின் மீதான வருவாய் பங்கு ஆகியவற்றுடன் தொடர்பான பிரச்சினைகளை இது அகற்றும்.
  1. சலுகையாளர்கள் உயர் திறன்மிக்க சாதனங்கள்/வசதிகள்/ தொழில்நுட்பம் ஆகியவற்றை பயன்படுத்தி, உயர் உற்பத்திக்கான மதிப்பு பொறியியலை மேற்கொள்ளவும், திட்டச் சொத்துகளை பயன்பாட்டை மேம்படுத்திட அல்லது/கட்டணத்தை குறைத்திட அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
  2. “உண்மையான திட்டச் செலவு” என்பது “மொத்த திட்டச் செலவு” என மாற்றப்படும்.
  3. “சட்டத்தில் மாறுதல்” என்பதற்கான புதிய விளக்கம் கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியதாகும்
  1. டி.ஏ.எம்.பி. வழிகாட்டு நெறிமுறைகள்/உத்தரவுகள், சுற்றுச்சூழல் சட்டம் & தொழிலாளர் சட்டங்களின்படி ஏற்படும் தரநிலைகள் மற்றும் நிபந்தனைகளை சுமத்துதல், மற்றும்
  2. சலுகையாளருக்கு ஈடுசெய்யும் வகையில் புதிய வரிகள், கட்டணங்கள் போன்றவற்றை உயர்த்துதல் மற்றும் சுமத்துதல். திட்டத்தின் நம்பகத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளதால், மத்திய & மாநில அரசுகளால் நேரடி வரி சுமத்துதல்/உயர்த்துதல் தவிர்த்து, புதிய வரிகள், கட்டணங்கள், போன்றவற்றை உயர்த்துதல் மற்றும் சுமத்துதல் மூலம் சலுகையாளர்களுக்கு தற்போது ஈடு செய்யப்படும்.
  • வணிகரீதியான செயல்பாட்டு தேதிக்கு முன்பாக செயல்பாடுகளை துவங்குவதற்கான அனுமதி. முறையான நிறைவுச் சான்றிதழுக்கு முன்பாக, பல திட்டங்களில், துறைமுகங்கள் அளிக்கும் சொத்துகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள இது வழிவகுக்கும்.
  • மறுநிதியுதவி வசதியை பொறுத்தவரையில், திட்டங்களின் நிதி நம்பகத்தன்மையை மேம்படுத்தும் வண்ணம் சலுகையாளர்களுக்கு குறைந்த அளவிலான நீண்ட கால நிதியுதவி அளிப்பதை நோக்கமாக கொள்ளப்பட்டுள்ளது.
  1. சலுகையாளர் மற்றும் சலுகையளிக்கும் ஆணையத்தினால் கையெழுத்திடப்படும் இணைப்பு ஒப்பந்தத்தை அறிமுகம் செய்வதன் மூலம் தற்போதைய சலுகையாளர்களுக்கும் குறைகளுக்கு தீர்வு காண ஏதுவாக எஸ்.ஏ.ஆர்.ஓ.டீ.-போர்ட்ஸ் வசதி விரிவுபடுத்தப்படும்.
  2. துறைமுக பயன்பாட்டாளர்களின் வசதிக்காக இணைய புகார் தளம் அறிமுகப்படுத்தப்படும்.
  3. திட்டத்தின் காலவாரியான நிலை அறிக்கையை பேணுவதற்காக கண்காணிப்பு ஏற்பாடு அறிமுகப்படுத்தப்படும்.

கடந்த இருபது ஆண்டுகளில் துறைமுகத் துறையில், அரசு-தனியார் பங்களிப்பு திட்டங்களில் பெறப்பட்ட அனுபவங்களின் அடிப்படையிலும், தற்போதைய எம்.சி.ஏ.-வில் உள்ள சில பிரிவுகளால் ஏற்படும் பிரச்சினைகளை களையும் வகையிலும், இத்திருத்தங்கள் முன்மொழியப்பட்டன. பங்கேற்பாளர்களுடனான விரிவான கலந்துரையாடல்களுக்கு பின்பாக எம்.சி.ஏ.வீல் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. 

*****