பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா-மியான்மர் இடையே எல்லைப்பகுதியை கடந்து செல்வது தொடர்பான ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த ஒப்பந்தம், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளிலும் வசித்துவரும் மக்களுக்கு தாராளமாக சென்றுவரும் வகையில் தற்போது உள்ள உரிமைகளை ஒழுங்குபடுத்தவும், ஒப்புதல் அளிக்கவும் வழிவகை செய்யும். செல்லத்தக்க பாஸ்போர்ட் மற்றும் விசா அடிப்படையில், மக்கள் எல்லைப்பகுதியை கடந்து செல்ல முடியும். இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார மற்றும் சமூக தொடர்புகள் வலுப்படும்.
இந்தியா-மியான்மர் எல்லையைத்தாண்டி மக்கள் இடம்பெயர்ந்து செல்வதற்கான ஏற்பாட்டை இந்த உடன்பாடு உருவாக்கும். இது இணைப்பை ஏற்படுத்துவதுடன், இந்தியாவின் வடகிழக்குப் பகுதி மாநிலங்களில் உள்ள மக்களுக்கு, மியான்மர் மக்களுடனான தொடர்பை வலுப்படுத்தும்.
வடகிழக்குப் பகுதியின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். மேலும், மியான்மருடனான நமது புவியியல் தொடர்பை சமமாக்கி, வர்த்தகத்தையும், மக்களுக்கு இடையேயான தொடர்பையும் ஊக்குவிக்கும்.
எல்லைப் பகுதியில் அதிக அளவில் வசித்துவரும் பழங்குடியினத்தவர்களின் பாரம்பரிய உரிமையை இந்த ஒப்பந்தம் பாதுகாக்கும். இதன்படி, நில எல்லைப்பகுதியைத் தாண்டி பாரம்பரியமான முறையில் தாராளமாக சென்றுவர முடியும்.
*****