Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்த தின விழாவில் பிரதமர் கருத்து

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமை ‘ராஷ்ட்ரபதி’ என்று அழைப்பதைவிட, ராஷ்ட்ர ரத்னா என்று அழைக்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். புதுதில்லியில் டிஆர்டிஓ வளாகத்தில் நடைபெற்ற ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் பிறந்த தின விழாவில் பிரதமர் உரையாற்றினார்.

டாக்டர் கலாம் நினைவு மண்டபம் இராமேஸ்வரத்தில் கட்டப்படும் என்று கூறிய பிரதமர் இது வருங்கால தலைமுறையினரை உற்சாகப்படுத்தும் என்று கூறினார்.

வாழ்க்கையில் பலர் வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் போது டாக்டர் கலாம் எப்போதுமே புதிய சவால்களை சந்தித்து வெற்றி கண்டார். கட்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னர் புனரமைக்கும் பணியில் டாக்டர் கலாமுடன் தாம் ஒன்றினைந்து பணிப்புரிந்ததை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

டாக்டர் கலாம் தம்மை ஆசிரியராகவேக் கருத வேண்டும் என்று விரும்பினார் என்றும் வருங்கால சந்ததியினர் நல்ல முறையில் வழி நடத்தி செல்லப்படுவதற்கு முக்கியம் அளித்தவர், என்று பிரதமர் கூறியுள்ளார்.

கனிணி மூலம் தகவல் பாதுகாப்பு, அனைவருக்கும் வீடு, நதிகள் இணைப்பு, விவசாய உற்பத்தி அதிகரிப்பு, கடல் பொருட்களிள் பொருளாதார வளம், துல்லியமான பொருட்கள் தயாரிப்பு போன்ற முக்கியமான பல பிரிவுகளில் புதிய உத்திகள் அவசியம் என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

டாக்டர் கலாம் இந்தியாவின் சாதாரண நிலையில் இருந்து உயரிய பதவியை வகித்தார் என்பதோடு மட்டுமல்லாமல் பல பெரிய அமைப்புகளை ஆரம்பத்தில் இருந்து உயர் நிலைக்கு கொண்டு வந்தவர் என்றும் பிரதமர் கூறினார். அவரை வழிகாட்டியாகக் கருதி நாம் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

முன்னதாக டிஆர் டிஓ வளாகத்தில் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் உருவ சிலையை பிரதமர் திறந்து வைத்தார். “டாக்டர் கலாம் வாழ்க்கையில் கொண்டாட்டங்கள்” என்ற தலைப்பில் கண்காட்சியையும் பிரதமர் திறந்து வைத்து பார்வையிட்டார். டாக்டர் கலாமின் நினைவு அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிட்டார்.

மத்திய அமைச்சர்கள் திரு. வெங்கயா நாயுடு, திரு. மனோகர் பரிக்கர், திரு. ரவிசங்கர் பிரசாத் மற்றும் டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.

••••