Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

கொழும்பில் (மே 12, 2017) நடைபெற்ற விசாக் தினக் கொண்டாட்டத்தில் பாரதப் பிரதமர் ஆற்றிய உரை

கொழும்பில் (மே 12, 2017) நடைபெற்ற விசாக் தினக் கொண்டாட்டத்தில் பாரதப் பிரதமர் ஆற்றிய உரை

கொழும்பில் (மே 12, 2017) நடைபெற்ற விசாக் தினக் கொண்டாட்டத்தில் பாரதப் பிரதமர் ஆற்றிய உரை

கொழும்பில் (மே 12, 2017) நடைபெற்ற விசாக் தினக் கொண்டாட்டத்தில் பாரதப் பிரதமர் ஆற்றிய உரை


1 பிரதமர் அலுவலக மக்கள் தொடர்புத் துறை செய்திக் குறிப்பு.

மிகுந்த மரியாதைக்குரிய  இலங்கையின் மகா நாயகோனதேரோ அவர்களே

மிகுந்த மரியாதைக்குரிய இலங்கையின் சங்கராஜதைரோஸ் அவர்களே

மரியாதைக்குரிய சமய மற்றும் ஆன்மிகத் தலைவர்களே

மாண்புமிகு இலங்கை அதிபர் மேதகு மைத்ரிபால ஸ்ரீசேன அவர்களே,

மாண்புமிகு இலங்கைப் பிரதமர் மேதகு ரணில் விக்கிரமசிங்க அவர்களே,

மாண்புமிகு நாடாளுமன்ற மேதகு காரூ ஜெயசூரிய அவர்களே,

மிகுந்த மரியாதைக்குரிய விசாக தின சர்வதேச கவுன்சில் தலைவர் டாக்டர் பிராமின் பண்டிட் அவர்களே,

மதிப்புக்குரிய பேராளர்களே,

ஊடக நண்பர்களே,

மாண்பிற்குரியவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே..

வணக்கம், ஆயுபவன்.

விசாக் தினம் மிகவும் புனிதமான நாளாகும். மானுடத்தைப் போற்றும் நாள், பிறப்பைக் கொண்டாடி வணங்கும் நாள். ஞானஒளிக்கான நாள், புத்த பிரான் பரிநிர்வாணம் எய்திய “தத்த கதா” எனப்படும் புனித நாள். புத்தரை மகிழ்வோடு போற்றும் நாளாகவும் அமைந்துள்ளது.  உன்னதமான சத்தியம், எல்லாக் காலத்துக்கும் பொருந்தும் அறம், புத்தர் கண்ட நான்கு உண்மைகள் ஆகியவற்றுக்கான நாளாகும்.

விசாக தினம் தானம் (தான்), நன்னடத்தை (சீல்), துறவு (நேக்ரம்), ஞானம் (பின்யா),  சக்தி (கீரி), சகிப்பு (கந்த்தி), உண்மையாக இருத்தல் (சச்),  தீர்மானம் (அதித்தான்), அன்புசெலுத்துதல் (மேட்டா), மனஅமைதி (உப்பேகஹா) பத்து முழுமைநிலைகளைச் சிந்திக்கும் நாளாகும்.

இந்த நாள் இலங்கையில் உள்ள உங்களுக்கும், இந்தியாவில் உள்ள எங்களுக்கு, உலகெங்கும் உள்ள பவுத்தர்களுக்கு மகத்தான முக்கியத்துவம் நிறைந்த நாளாகும்.

கொழும்பு நகரில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் சர்வதே தேச விசாக் தினத்திற்கு சிறப்பு விருந்தினராக என்னை அழைத்துச் சிறப்பிக்கும்  இலங்கை அதிபர் மேதகு மைத்ரிபால ஸ்ரீசேனவுக்கும் மேதகு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கும் இலங்கை மக்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புனிதமான நாளில் தன்னை முழுமையாக உணர்ந்த புத்தர் அவதரித்த இந்தியாவின் 125 கோடி மக்களுடைய  வாழ்த்துகளையும் என்னுடன் கொண்டுவந்துள்ளேன்.

மாண்புமிகு பிரமுகர்களே, நண்பர்களே,

நமது மண்டலம் விலை மதிப்பில்லாத வெகுமதியான புத்தரையும் அவரது போதனைகளையும் உலகுக்கே அளித்துள்ளது. இந்தியாவில் சித்தார்த்தர் புத்தராக மாறிய உள்ள புத்த கயா புனிதத் தலம் உலகெங்கும் பரவிய பவுத்தத்துக்கு மையமாகத் திகழ்கிறது. புத்தர் பெருமானின் முதல் உபதேச உரை வாராணசியில்தான் நிகழ்த்தப்பட்டது. அந்தத் தொகுதியிலிருந்துதான் நான் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். அங்குதான் அறநெறி இயக்கம் உருவானது. எங்கள் நாட்டு தேசிய சின்னங்கள் பவுத்தத்தின் உந்துதலில் தோன்றியவை. பவுத்தமும் அதன் பல்வேறு போக்குகளும் நமது பண்பாடு, ஆளுகை, தத்துவம் ஆகியவற்றில் ஆழமாகப் பதிந்துள்ளன. பவுத்தத்தின் தெய்வீக நறுமணம் இந்தியாவிலிருந்து உலகின் மூலை முடுக்குகளில் பரவியது.

அசோகப் பேரரசரின் போற்றுதலுக்குரிய மகன் மகேந்திரனும் மகள்  சங்கமித்திரையும்  பவுத்த அறநெறிகளைப் பரப்புவதற்கான அறத் தூதர்களாக (தம்ம தூதர்கள்) இந்தியாவிலிருந்து இலங்கைக்குப் பயணம் செய்தனர். “அறநெறிதான் மிகப் பெரிய பரிசாகும்” என்று பகவான் புத்தரே கூறியுள்ளார். இன்று, புத்தரின் போதனைகளைக் கற்பிக்க முக்கியமான மையங்களைக் கொண்ட பெருமையை இலங்கை அடைகிறது.

பல நூறாண்டுகள் கழித்து,  அனகாரிக தர்மபால அதே போல பயணம் மேற்கொண்டார். ஆனால், புத்தரின் அறநெறிகளைப் பரப்புவதற்காக இந்த முறை  புத்தரின் மிக முக்கியமான சின்னங்களை கொண்ட  இலங்கையிலிருந்து புத்தர் தோன்றிய இந்தியாவுக்குச் சென்றார். ஒரு வகையில் பார்த்தால், எங்களது வேர்களுக்கு அழைத்துச் சென்றீர்கள்.  புத்தரின் மிக முக்கியமான நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்காக  இலங்கைக்கு உலக நாடுகள் நன்றியுடன் இருக்கின்றன. பவுத்தத்தின் குறையாத பாரம்பரியத்தை.

காக்க விசாக தினம் ஒரு சந்தர்ப்பமாக அமைகிறது. பல நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாக  இரு நாடுகளின் சமுதாயத்தையும் இணைக்கிறது.

நண்பர்களே,

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை “பெரியவர்கள்” சரியான நேரத்தில் உருவாக்கித் தந்தனர். நமது உறவுக்கு பவுத்தம் எப்போதும் ஒளி பாய்ச்சி வருகிறது. நெருங்கிய அண்டை நாடுகளான நாம் நமது உறவுகள் பல அடுக்குகளைக் கடந்து விரிவடைந்து வருகிறது. பவுத்த விழுமியங்களால் இரு தரப்பினருக்கும் இடையில் பரஸ்பரம் வலிமை பெற்று வருகிறது. நமது நட்பு நமது மக்களின் இதயங்களில் தோன்றுகிற நட்பு ஆகும்.

இரு நாடுகளிலும் உள்ள பவுத்த பாரம்பரியத்தைக் கவுரவிக்கும் வகையிலும் ஆழமாக்கும் வகையிலும் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியாவின் வாராணசிக்கும் கொழும்பு நகருக்கும் இடையில் ஏர் இந்தியா நேரடி விமானப் போக்குவரத்து சேவை தொடங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்க விரும்புகிறேன். இந்த சேவை மூலம் இலங்கையில் வாழும் சகோதர சகோதரிகள் புத்தர் பிறந்த புனித பூமிக்குப் பயணம் செய்வது எளிதாக அமையும். நேரடியாக ஸ்ரவஸ்தி, குஷிநகர், சங்கஸா, கவுசாம்பி, சாரநாத் ஆகிய நகரங்களுக்கு நேரடியாகச் செல்லவும்  உதவும். எனது தமிழ்ச் சகோதரர்கள் காசி விசுவநாதர் ஆலயம் அமைந்த வாராணாசிக்கு வருவதற்கு வழியமைக்கும்.

மிகுந்த மரியாதைக்குரிய பவுத்த துறவிகளே, மாண்புமிகு தலைவர்களே, நண்பர்களே,

இலங்கையுடன் கொண்ட உறவுக்குச் சரியான சந்தர்ப்பத்தில் இருப்பதாக நான் கருதுகிறேன். இரு நாடுகளும் கொண்டுள்ள கூட்டிணைவினால்  பல்வேறு துறைகளில் சாதிப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது. எங்களைப் பொறுத்தவரையில் இந்த உறவில் பொருத்தமான அம்சமாக இருப்பது உங்களது வெற்றியும் முன்னேற்றமும்தான். இலங்கையின் சகோதர சகோதரிகளின் பொருளாதாரம் மேம்படுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நமது மேம்பாட்டுக்கான ஒத்துழைப்பு மேலும் ஆழமாகும்வகையில்  சாதகமான வளர்ச்சிக்காக நாங்கள் தொடர்ந்து உதவிவருவோம். அறிவாற்றல், திறமை, வளம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்வதில் நமது வலிமை அமைந்திருக்கிறது. வர்த்தகம், முதலீடுகள் ஆகியவற்றில் ஏற்கெனவே உடன்பாடு கொண்ட கூட்டாளிகளாக இருந்து வருகிறோம். வர்த்தகம், தொழில்நுட்பம், யோசனைகள் ஆகியவை தங்கு தடையில்லாமல் பகிர்ந்து கொள்ளப்படுவதால், இரு தரப்பினருக்கும் பலன்களைத் தரும் என்று நம்புகிறோம். இந்தியாவின் வேகமான வளர்ச்சி இந்த மொத்த மண்டலத்துக்குமே குறிப்பாக இலங்கைக்குப் பலன்களை ஈட்டித் தரும். கட்டுமானம், இணைப்பு, போக்குவரத்து, எரிசக்தி ஆகியவற்றில் ஒத்துழைப்பை அதிகரிக்கவும் தயாராக இருக்கிறோம். நமது வளர்ச்சிக்கான கூட்டு அநேகமாக எல்லாத் துறைகளிலும் விரிந்திருக்கிறது. குறிப்பாக, வேளாண்மை, கல்வி, மக்கள் நல்வாழ்வு, மறுகுடியேற்றம், போக்குவரத்து, மின்சாரம், கலாசாரம், குடிநீர், தங்குமிடம், விளையாட்டுகள், மனித ஆற்றல் ஆகியவற்றில் எல்லாம் கூட்டிணைவு அமைந்துள்ளது.

இன்றைய தினம் இலங்கையுடனான இந்தியாவின் மேம்பாட்டு ஒத்துழைப்பு 260 கோடி டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. இலங்கையில் எதிர்காலத்தில் அமைதி, வளம், பாதுகாப்பு ஆகியவை மீண்டும் ஏற்படவேண்டும் என்பதற்கு உதவுவதே எங்களது ஒரே நோக்கமாகும்.  காரணம், இலங்கை மக்களின் சமூக, பொருளாதார மேம்பாடு 125 கோடி இந்தியர்களுடன் தொடர்புடையது. நிலத்திலோ இந்தியப் பெருங்கடலிலோ நமது மக்களின் பாதுகாப்பு பிரிக்க முடியாதது.  அதிபர் மைத்ரிபால ஸ்ரீசேனவுடனும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனும் நான் விவாதித்ததில் இருதரப்பின் பொதுவான இலக்குகளை அடைவதுதான் வலியுறுத்தப்பட்டது. உங்களது சமூகத்தின் நல்லிணக்கம், முன்னேற்றத்துக்கான வழிமுறைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, நாட்டைக் கட்டமைக்கும் முயற்சியில் உங்களுக்கு ஆதரவு தரும் ஒரு நண்பனாகவும் கூட்டாளியாகவும் இந்தியாவைப் பார்ப்பீர்கள்.

 

மிகுந்த மரியாதைக்குரிய பவுத்த துறவிகளே, மாண்புமிகு தலைவர்களே, நண்பர்களே,

2,500  ஆண்டுகளுக்கும் முன்பு பகவான் புத்தர் கூறிய கருத்துகள் இருபதாம் நூற்றாண்டிலும் பொருத்தமானவையாக இருக்கின்றன. புத்தர் காட்டிய நடு வழிப் பாதை (மத்யம் ப்ரதிபதா) நாம் எல்லோருக்குமான வழியாகும். அது அனைத்து இடங்களுக்கும் எல்லாக் காலங்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. தேசங்களை இணைக்கும் சக்தியாக இருக்கிறது. தெற்கு, மத்திய, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகள் புத்தர் பிறந்த இந்திய மண்ணில் தங்களது பவுத்த தொடர்புகளின் வேர் அமைந்துள்ளது குறித்துப் பெருமிதம் கொள்கின்றன.

இந்த விசாக தினத்தின் பொருண்மையாக சமூக நீதி, நீடித்த உலக அமைதி ஆகிய கோட்பாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது புத்தரின் போதனைகளை வெளிப்படுத்துகின்றன. இந்தப் பொருண்மைகள் தனித்தனியானவை என்று தோன்றும். ஆனால், அவை ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை. சமூக நீதி பிரச்சினை மக்களிடையிலும் சமுதாயங்களிடையிலும் உள்ள முரண்பாடுகளுடன் தொடர்புள்ளது. நாம் மட்டும் என்ற எண்ணம், ஆசை, அந்த ஆசையே பேராசையாக மாறிவிடுகிறது. இந்தப் பேராசை மனிதர்களின் இயல்பானக் குணத்தின் மீது ஆதிக்கம் செலுத்தி, அந்த இயல்புக் குணத்தைக் குறைத்துவிடுகிறது. எல்லாவற்றையும் அடைந்தே தீர வேண்டும் என்ற ஆசை சமுதாயத்தில் வருமானத்தில் ஏற்றத் தாழ்வை உருவாக்கிவிடுகிறது. சமூக நல்லிணக்கத்தையும் பாதித்துவிடுகிறது.

 

அதைப் போல் உலக அமைதி நீடிப்பதற்குப் பெரிய சவாலாக இருப்பது நாடுகளிடையிலான முரண்பாடுகள், போட்டிகள்தான் என்று கூறிவிடமுடியாது. அவை மனநிலையிலிருந்தும், எண்ண ஓட்டத்திலிருந்தும், வெறுப்பின் அடிப்படையிலான நடைமுறைகளிலும் வன்முறையினாலும் உருவாகின்றன. இத்தகைய அழிவுக்கான உணர்வுதான் நமது மண்டலத்தில் உள்ள பயங்கரவாதப் பிரச்சினையாக வெளிப்படுகிறது. நமது மண்டலப் பகுதியில் இந்த வெறுப்புச் சித்தாந்தங்களும் அவற்றை ஆதரிப்போரும் பேச்சுவார்த்தைக்குத் தயாராவதில்லை. மாறாக, மரணத்தையும், அழிவையும் நிகழ்த்துகிறார்கள். உலகம் முழுவதும் வளர்ந்து வரும் வன்முறைக்குச் சரியான பதிலடி புத்தரின் அமைதி, சமாதானத்துக்கான போதனைகளும் கருத்துகளும்தான் என்று திடமாக நம்புகிறேன். முரண்பாடுகள், மோதல்கள் இல்லாதிருப்பதே அமைதி என்றும் கூறிவிட முடியாது. சாதமான அமைதி என்பது எல்லோரும் இணைந்து பேச்சுவார்த்தை, நல்லிணக்கம், நீதி ஆகியவற்றை வளர்த்தெடுப்பதில் அமைந்துள்ளது. புத்தர் கூறியதுபோல “அமைதியை விட மிகச் சிறந்த பேரின்பம் இல்லை” (நதி சாந்தி பரம் சுகம்) என்பதே சரியானது.

இந்த விசாகப் புனித தினத்தில், அமைதி, அனைவரையும் சேர்த்துக் கொள்ளுதல், உள்ளடக்குதல், இணக்கம் ஆகிய பகவான் புத்தரின் தத்துவங்களை இந்தியாவும் இலங்கையும் உயர்த்திப் பிடிப்பதற்கு இணைந்து செயல்படும் என்பது என் நம்பிக்கை.  இது அரசியல் வாழ்விலும் அரசாங்க நடைமுறையிலும் இருக்கவேண்டும். இதுதான் தனி நபர்களையும், குடும்பங்களையும், சமூகங்களையும், நாடுகளையும், ஏன் உலகையும் பேராசை, வெறுப்பு, அறியாமை ஆகிய மூன்று நஞ்சுகளிலிருந்து விடுவிக்கும் உண்மையான பாதையாகும்.

மரியாதைக்குரிய துறவியரே, மாண்புமிக்க தலைவர்களே, நண்பர்களே,

இந்தப் புனித விசாகத் தினத்தில் நாம் இருளை விலக்கி ஒளிபிறக்க ஞான விளக்குகளை ஏற்றுவோம். நமக்குள்ளே பலவற்றைக் காண்போம். வேறு எதற்கும் இல்லாமல், சத்தியத்தை  மட்டும் உயர்த்திப் பிடிப்போம். உலகம் முழுவதும் ஒளி வீசிக் கொண்டிருக்கும் புத்தரின் நெறிமுறைகளைப் பின்பற்றுவதற்காக நம்மை அர்ப்பணிப்போம்.

புத்தர் போதித்த தம்ம பதத்தின் 387வது பாடல் இப்படிக் கூறுகிறது:

சூரியன் பகலில் ஒளிவீசுகிறது

சந்திரன் இரவில் ஒளி வீசுகிறது

வீரனின் கவசம் களத்தில் பிரகாசிக்கிறது

அந்தணர்கள் தியானத்தின்போது பிரகாசிக்கிறார்கள்

ஆனால், ஞானம் பெற்றவன் (பவுத்தன்) இரவிலும் பகலிலும் அறிவொளியால் பிரகாசிக்கிறான்.

என்னைக் கவுரவித்ததற்கு மீண்டும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

கண்டியில் புத்தரின் புனிதப் பல் வைத்துப் பூஜிக்கப்படும் ஆலயத்தில் ஸ்ரீ தலத மலிகாவவைத் தரிசித்து வணங்குவதை எதிர்நோக்குகிறேன். புத்தம், தருமம், சங்கம் என்ற மூன்று முத்துகளும் நம் எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும்.

நன்றி, மிக்க நன்றி!

 

* * * *