பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் நடுத்த வருவாய்ப் பிரிவினர் (MIG) கடன்சார் மானியத்தில் (CLSS) சலுகை பெறுவதற்கான கட்டட உள்ளுறை பரப்பின் உச்ச வரம்பை உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இத்திட்டம் மீதான நம்பகத் தன்மை, இத்திட்டம் பரவலாக்கம், திட்டம் சென்றடைவது ஆகியவை தொடர்பாக மத்திய அமைச்சரவைக் குழு கீழ்க்கண்டவற்றுக்கு அனுமதி அளித்துள்ளது:
மற்றும்
நடுத்த வருவாய்ப் பிரிவினருக்கான (MIG) கடன்சார் மானியச் (CLSS) சலுகை நகர்ப்புறத்தில் போதிய வீடுகள் இல்லாதக் குறையைச் சமாளிக்க ஒரு சாதகமான வரவேற்கத் தக்க முடிவாகும். மேலும், நடுத்தர வருவாய்ப் பிரிவினர் வட்டிச் சலுகைத் திட்டத்தின் பலனைப் பெறுவதற்கு உதவும் முதல் திட்டமாகும்.
நடுத்த வருவாய்ப் பிரிவினருக்கான (MIG) கடன்சார் மானியச் (CLSS) சலுகை இரு வகை வருவாய்ப் பிரிவினருக்கு அமல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.6,00,001 முதல் ரூ. 12,00,000 வரையில் (MIG-I) பெறுவோர், மற்றும் ரூ. 12,00,000 முதல் ரூ. 18,00,000 (MIG- I I) பெறுவோர் என இரு வகையான பிரிவினர் உள்ளனர். நடுத்தர வருவாய்ப் பிரிவின் முதல் வகையினருக்கு (MIG-I) ரூ. 9 லட்சம் வரையிலான கடனுக்கு 4 சதவீதம் வட்டிச் சலுகை அளிக்கப்படுகிறது. நடுத்தர வருவாய்ப் பிரிவின் முதல் வகையினருக்கு (MIG-I I) ரூ. 12 லட்சம் வரையிலான கடனுக்கு 3 சதவீதம் வட்டிச் சலுகை அளிக்கப்படுகிறது. கடன் செலுத்துவதற்கான இருபது ஆண்டுளுக்கு அல்லது அதற்குள் முடியும் காலக் கெடுவுக்கு மொத்த தற்போதைய மதிப்பில் 9 சதவீதம் வரையில் வட்டிச் சலுகை அளிக்கப்படும். வீட்டுக் கடன் ரூ. 9 லட்சத்துக்கும் ரூ. 12 லட்சத்துக்கும் மேற்பட்ட கடனுக்கான வட்டியில் சலுகை கிடையாது.
நடுத்த வருவாய்ப் பிரிவினருக்கான (MIG) கடன்சார் மானியச் (CLSS) சலுகை தற்போது 31.3.2019 வரையில் அமலில் இருக்கும்.
விளைவுகள்:
பின்னணி:
மாண்புமிகு பிரதம மந்திரி 31.12.2016ஆம் தேதி நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அதில், வீட்டு வசதிக் கடனை ஏழை மக்கள் பெறுவதற்கான சலுகைகளை உயர்த்துவது குறித்தும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் வீட்டு வசதிக் கடன் பெறுவதில் புதிய வட்டிச் சலுகை குறித்தும் அறிவித்திருந்தார். அந்த உரையை அடுத்து, பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு கடன்சார் சலுகைத் திட்டத்தை (CLSS) 1.1.2017 முதல் அமல்படுத்திவருகிறது.
****
Hike in carpet area to help middle income buyers: Realtorshttps://t.co/Lm3TvRoD7A
— PMO India (@PMOIndia) November 17, 2017
via NMApp pic.twitter.com/t6i92X10td