Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிலிப்பைன்ஸில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்

பிலிப்பைன்ஸில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்

பிலிப்பைன்ஸில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்

பிலிப்பைன்ஸில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் உரையாற்றினார்


பிலிப்பைன்சின் மணிலா நகரில் இந்திய சமூகத்தினர் மத்தியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

அப்போது, இந்தியாவுக்கு ஆசியான் பிராந்தியம் மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார். ஆசியான் பிராந்தியத்துடன் இந்தியாவுக்கு நீண்டகாலமாக உள்ள ஒரே மாதிரியான பாரம்பரியம், உணர்வுப்பூர்வமான பந்தம் ஆகியவை குறித்து பிரதமர் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக, புத்தர் மற்றும் ராமாயணத்தை அவர் குறிப்பிட்டார். இந்த பாரம்பரியத்தை ஊக்குவித்து வளர்ப்பதில் இந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்திய வம்சாவளியினர் முக்கியப் பங்கு வகிப்பதாக அவர் தெரிவித்தார்.

மற்ற நாடுகளை இந்தியா ஒருபோதும் துன்புறுத்தியது இல்லை என்று பிரதமர் தெரிவித்தார். முதலாவது மற்றும் இரண்டாவது உலகப் போர்களின்போது, இந்தியாவிலிருந்து மிகவும் தொலைவான பகுதியில் ஒன்றரை லட்சம் இந்திய வீரர்கள் உயிர்துறந்ததை அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள இந்தியாவும் கூட, வளமாகவும், வலுவாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் தெரிவித்தார். ஆசியாவின் நூற்றாண்டு என்று குறிப்பிடப்படும் 21-ம் நூற்றாண்டை இந்தியாவின் நூற்றாண்டாக மாற்றுவதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

ஏழை மக்களை மேம்படுத்துவதற்காக மக்கள் நிதி திட்டம், இலவச எரிவாயு இணைப்புத் திட்டம் போன்ற அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் பேசினார். மானியத்துடன் ஆதாரை இணைத்ததன் மூலம் கிடைத்த ஆதாயங்கள் குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

***