Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தேசிய போர் நினைவுச் சின்னத்தை கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புது தில்லியில் உள்ள இந்தியா கேட் அருகில் பிரின்சஸ் பார்க் என்னுமிடத்தில் தேசிய போர் நினைவுச் சின்னத்தையும், தேசிய போர் நினைவு அருங்காட்சியகம் ஒன்றையும் அமைக்க பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் தியாகம் புரிந்த இந்திய வீரர்களின் நினைவாக இவை அமைக்கப்படுகின்றன.

இந்த திட்டத்திற்கு ரூ 500 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில் இத்திட்டம் நிறைவு பெறும்.

நாட்டின் சுதந்திரத்தையும், ஒருமைப்பாட்டையும் காப்பதற்காக சுதந்திரத்திற்கு பின் 22,500 போர் வீரர்கள் தியாகம் புரிந்துள்ளார்கள். சுதந்திரம் பெற்ற பின் 69 ஆண்டுகள் ஆன பின்பும் இத்தியாகிகளின் நினைவை கூறும் வகையில் நினைவுச் சின்னங்கள் இன்றுவரை எழுப்பப்படவில்லை. இராணுவத்தினரின் நீண்டகால கோரிக்கையை ஏற்று அமைச்சரவை இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த பெருமைமிகு திட்டத்தை கண்காணிப்பதற்காக குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவிற்கு பாதுகாப்புத்துறைச் செயலாளர் தலைவராக இருப்பார். இக்குழுவிற்கு உதவி செய்ய திட்ட நிர்வாகக்குழு ஒன்று அமைக்கப்படும். குறிப்பிட்ட காலவரையறைக்குள் இத்திட்டத்தை நிறைவேற்ற இக்குழு உறுதி செய்யும். தேசிய போர் நினைவுச் சின்னம் மற்றும் அருங்காட்சியகத்தை பராமரிக்க நிர்வாக அமைப்பு ஒன்றும் உருவாக்கப்படும்.

போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் போர் நினைவுச் சின்னமும், அருங்ககாட்சியகமும் மத்திய அரசால் அமைக்கப்படுகிறது. நினைவுச் சின்னத்தை காணும் மக்களுக்கு இதனால் நாட்டுப்பற்று மேலும் அதிகரிக்கும். தாய் நாட்டிற்காக உன்னத உயிர்த் தியாகம் புரிந்த போர் வீரர்களுக்கு மரியாதை செலுத்த நாட்டு மக்களுக்கு இதனால் வாய்ப்பு ஏற்படும்.

போர் வீரர்களின் கடைசி கட்ட இயக்கங்கள் மற்றும் அவர்கள் இறந்த இடம் ஆகியவை மக்களுக்கு தெரியாமல் இருப்பதால் அதுபோன்ற தருணங்களை அருங்காட்சியகம் வரலாற்றில் நினைவுக்கு கொண்டு வரும் வகையில் இருக்கும்.

நாட்டின் வளர்ச்சியில் இதுபோன்ற திட்டம் முடிவு பெறாமல் இருப்பதாக அரசு எண்ணுகிறது. போர்வீரர்கள் பாரத மாதாவிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்தது வீண்போகாது என்றும் அரசு நம்புகிறது. போர் நினைவுச் சின்னத்தை காணும்போது நம்மை நாமே இந்த நாட்டிற்காக அர்ப்பணிக்கும் உணர்வு ஏற்படும்.

***