Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளில் உள்ள அதற்கு சமமான கல்வி அலுவலர்கள் & மத்திய நிதியுதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிலையங்களின் ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட ஊதிய விகிதத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 8 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) ஆளுகைக்குள்பட்டு வரும் உயர் கல்வி நிலையங்களின் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழிற் கல்வி நிலையங்களின் கல்வி அலுவலர்களுக்கு ஊதிய திருத்தம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது. மத்திய அரசுப் பணியாளர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரைகள் அமல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஊதிய திருத்தம் செய்யப்படுகிறது.

இந்த முடிவால் பல்கலைக்கழகங்கள்/ யு.ஜி.சி. அல்லது மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவி பெறும் 106 கல்லூரிகள் மற்றும் மாநில அரசுகளின் நிதியுதவி பெறும் 329 பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு பொது பல்கலைக்கழகங்களின் கீழ் இயங்கும் 12,912 அரசு மற்றும் தனியார் உதவிக் கல்லூரிகளின் 7.58 லட்சம் ஆசிரியர்கள் அதற்குச் சமமான பணியில் உள்ள கல்வி அலுவலர்களும் பயன் பெறுவார்கள்.

கூடுதலாக, மத்திய அரசின் நிதியுதவி பெறும் 119 தொழிற்கல்வி நிலையங்கள், அதாவது ஐ.ஐ.டி.கள், ஐ.ஐ.எஸ்.சி., ஐ.ஐ.எம்.கள், IISER-கள், IIIT-கள், NITIE போன்றவற்றின் ஆசிரியர்களும் திருத்தப்பட்ட ஊதிய விகிதம் பெறுவார்கள்.

ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊதிய விகிதங்கள் 1.1.2016ல் இருந்து அமல் செய்யப்படும். இந்த நடவடிக்கை காரணமாக மத்திய அரசுக்கு ரூ.9,800 கோடி நிதிச் சுமை ஏற்படும்.

தற்போது நடப்பில் உள்ள 6வது ஊதியக் குழுவின் ஊதியத்துக்கு எதிராக, இந்த ஊதிய திருத்தம் அமல் செய்யப்படுவதால் ஆசிரியர்களின் நுழைவுநிலை சம்பளம் ரூ.10,400 மற்றும் ரூ.49,000 என்ற அளவுக்கு அதிகரிக்கும். இந்த திருத்தம் காரணமாக நுழைவுநிலை ஊதிய உயர்வு 22% முதல் 28% வரையில் இருக்கும்.

மாநில அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களைப் பொருத்தவரையில், அந்தந்த மாநில அரசுகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஊதிய திருத்தம் காரணமாக மாநில அரசுகளுக்கு ஏற்படும் கூடுதல் சுமையை மத்திய அரசு ஏற்றுக் கொள்ளும். திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் முன்மொழியப் பட்டுள்ள நடவடிக்கைகள் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் என்றும், திறமையானவர்களை தக்கவைத்துக் கொள்ள உதவும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

******