பிரதமர் திரு. நரேந்திர மோடி இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூருக்கு இன்று விஜயம் செய்தார்.
பிலாஸ்பூரில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக (எய்ம்ஸ்) மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். 750 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை ரூ 1350 கோடி செலவில் கட்டப்படும். சுகாதார பேணலுடன் இந்த மருத்துவமனை மருத்துவக் கல்வி அளிக்கும். இளநிலை மற்றும் முது நிலை மருத்துவ கல்வியுடன் செவிலியர் சேவைக்கான கல்வியையும் அளிக்கும்.
ஆரம்ப சுகாதார பேணலின் டிஜிட்டல் கட்டுப்பாட்டு மையங்கள் தொடங்கப்பட்டதற்கான கல்வெட்டினையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
உனா என்ற இடத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிலையத்தின் அடிக்கல்லையும் பிரதமர் நாட்டினார்.
காங்கிரா மாவட்டத்தில் கண்டிரோரி என்ற இடத்தில் இந்திய உருக்கு ஆணையத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள உருக்காலையையும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
***