Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பிரதமருடன் இஸ்லாமிய சமுக மூத்த தலைவர்கள் சந்திப்பு


s2015040663838 [ PM India 144KB ]

s2015040663837 [ PM India 178KB ]

நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய சமுகத்தின் மூத்த தலைவர்கள் சையத் சுல்தான் – உல் – ஹாசன் சிஷ்டி மிஸ் பாகி (சாஜிதா நஷின், அஜ்மீர் சரிப்), ஹஜரத் குலாம் யசின் சாகிப் (சாகர் காஸி, வாரணாசி), சேக் வாசீம் அஸ்ரபி (இமம் தான்சீம், மும்பை), இஆர். முகமது ஹாமீத் (தேசிய தலைவர், இமம் தான்சீம், நாக்பூர்), ஹால்மா தஸ்லீம் ராசா சாகீப் (தர்கா பரேல்வி சரிப், உ.பி), சையத் அப்துல் ரசீத் அலி (சையத் சாகீத் தர்கா ஷாக்டோல், மத்திய பிரதேஷ்), முலானா அபு பாகர் பாஸ்னி (நகோரி சரிப் தர்கா, ராஜஸ்தான்), சையத் அலி அக்பர் (தாஜ்புரா சரிப், சென்னை), அஜி அப்துல் அபீஸ் கான் (இமாம், தான்சீம் பாலாகம், ம.பி) ஆகியோர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்து தங்களின் பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர்.

அதிகரித்து வரும் பதற்றத்தையும் வளர்ந்துவரும் தீவிரவாத அச்சுறுத்தல் குறித்து பேசிய தலைவர்கள் இந்த சவாலை சந்திக்க ஒற்றுமையும் கூட்டு முயற்சியும் தேவை என்று தெரிவித்தனர். இஸ்லாமிய புனிதத் தலங்கள், மசூதிகள், மதராஸாஸ்கள் ஆகிய உடைமைகளுக்கு சம்மந்தமான பிரச்சனைகளையும் பிரதமரிடம் தெரிவித்தனர். இஸ்லாமிய இளைஞர்களுக்கு, முக்கியமாக கல்வித் துறையில் சிறந்த வசதிகளை செய்து தர அரசு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

இந்தக் குழு பகிர்ந்துக் கொண்ட கருத்துகளைக் பொறுமையுடன் கேட்டுக் கொண்ட பிரதமர் இஸ்லாமிய சமுகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளின் குறைகளையும் தீர்க்க முழு ஆதரவு தரப்படும் என்று உறுதி அளித்தார். தேசிய வளர்ச்சியில் இஸ்லாமிய இளைஞர்கள் பெரிய அளவில் பங்குபெற அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டிய தேவைகள் குறித்து பிரதமர் தெரிவித்தார். குறிப்பாக, இஸ்லாமிய தலங்கள், மசூதிகள், மதராஸாஸ்கள் ஆகியவை குறித்த சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்து தாம் பரிசீலிப்பதாகவும் இஸ்லாமியர்களின் சமூக சூழ்நிலையை சீரமைக்கவும் அவர்களின் கல்வி சார்ந்த தேவைகளையும் கவனிக்கவும் முழு உதவி அளிக்கப்படும் என்று பிரதமர் உறுதி அளித்தார்.

விரைவான பொருளாதார வளர்ச்சி, மத நல்லிணக்கம், அமைதியை ஊக்குவிப்பது, தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவது ஆகிய பிரதமரின் குறிக்கோள்களுக்கு இஸ்லாமிய தலைவர்கள் தங்களது சமுகத்தின் முழு ஆதரவையும் அளிப்பதாக உறுதி அளித்தார்.