Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சீனா மற்றும் மியான்மருக்கு பிரதமரின் எதிர்வரும் விஜயம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி 2017, செப்டம்பர் 3-5 வரை நடைபெறும் 9வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீனாவின், ஜியாமென் நகருக்கு செல்லவிருக்கிறார். மேலும், பிரதமர் 2017, செப்டம்பர் 5-7 வரை மியான்மர் செல்லவிருக்கிறார்.

பிரதமர் பேஸ்புக்கில் உள்ள தனது பக்கத்தில் கீழ்க்கண்ட தொடர் பதிவுகளில் கூறியுள்ளதாவது:

“நான் 2017, செப்டம்பர் 3-5 வரை நடைபெறும் 9வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக சீனாவில் உள்ள ஜியாமென் செல்ல உள்ளேன்.

கடந்த ஆண்டு கோவாவில் கடந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பினை இந்தியா பெற்றிருந்தது. கோவா மாநாட்டின் முடிவுகள் மற்றும் வெளிகொணர்வுகள் மீதான கட்டமைப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன். சீனாவின் தலைமையின் கீழ் வலுவான பிரிக்ஸ் கூட்டமைப்பின் கூட்டப்பொருளுக்கு உதவும் வகையில் பயனுள்ள விவாதங்கள் மற்றும் எதிர்மறையான வெளிகொணர்வுகளை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

அனைத்து ஐந்து நாடுகளையும் சேர்ந்த தொழிற்துறை தலைவர்கள் பங்கேற்றுள்ள பிரிக்ஸ் வணிக குழுவுடன் நாங்கள் கலந்துரையாட உள்ளோம்.

இது தவிர, செப்டம்பர் 5 அன்று அதிபர் ஜீ ஜின்பிங் ஏற்பாடு செய்துள்ள வளரும் சந்தைகள் மற்றும் வளரும் நாடுகள் விவாதங்களில் பிரிக்ஸ் பங்குதாரர்கள் உள்ளிட்ட ஒன்பது பிற நாட்டு தலைவர்களுடனான சந்திப்பை நான் மிகவும் எதிர்நோக்கியுள்ளேன்.

மாநாட்டையொட்டி, இருதரப்பு நிலையில், தலைவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும். வளர்ச்சி மற்றும் அமைதிக்கு முக்கிய பங்கு வகித்து, இரண்டாவது பத்தாண்டை துவங்கியிருக்கும் பிரிக்ஸ்-ற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. உலக சவால்களுக்கு தீர்வு காணவும் மற்றும் உலக அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் பிரிக்ஸ் முக்கிய பங்களிப்பை அளிக்கிறது.
ஐக்கிய மியான்மர் குடியரசின் அதிபர் மேதகு யூ ஹ்டின் க்யாவ் அவர்களின் அழைப்பின் பேரில் 2017, செப்டம்பர் 5-7 வரை நான் மியான்மர் செல்ல உள்ளேன். இந்த அழகிய நாட்டிற்கு முன்னதாக நான் 2014-ம் ஆண்டு ஆசியன்-இந்தியா மாநாட்டிற்காக சென்றுள்ளேன், ஆனால் இது தான் இருதரப்பு பயணமாக மியான்மருக்கு நான் செல்லும் முதல் விஜயமாகும்.

அதிபர் யூ ஹ்டின் க்யாவ் மற்றும் மாநில உறுப்பினர், வெளிவிவகாரத் துறை அமைச்சர் மற்றும் அதிபர் அலுவலகத்தின் அமைச்சர் மேதகு டாவ் ஆங் சான் சூன் சீ ஆகியோரை நான் சந்திப்பதில் ஆவலாக உள்ளேன். 2016ம் ஆண்டு இந்த இரு பிரமுகர்களும் இந்தியாவிற்கு வருகை தரும்போது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

பயணத்தின்போது, குறிப்பாக வளர்ச்சி கூட்டுறவு விரிவாக்கத் திட்டம் மற்றும் மியான்மரில் இந்தியா மேற்கொண்டுள்ள சமூக-பொருளாதார உதவி உள்ளிட்ட நமது இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சி குறித்து நாங்கள் ஆய்வு செய்ய உள்ளதுடன், கூட்டாக பணியாற்றக்கூடிய புதிய துறைகள் குறித்து நாங்கள் கண்டறிய உள்ளோம். பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு, வணிகம் மற்றும் முதலீடு, திறன் வளர்ப்பு, உட்கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் தற்போதுள்ள நமது கூட்டுறவினை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் நாங்கள் கண்டறிய உள்ளோம்.

கடந்த ஆண்டின் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட ஆனந்த கோவில் மற்றும் பல பவுத்த மடங்கள் மற்றும் சுவரோவியங்கள் புதுப்பிக்கும் உன்னத பணியை இந்திய அகழ்வராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டுள்ள பாரம்பரியமிக்க நகரமான பகான் நகருக்கு செல்வதை நான் மிகவும் எதிர்பார்த்துள்ளேன்.

நான் எனது பயணத்தில் இறுதியாக யாங்கூன் செல்ல உள்ளேன். அங்கு இந்தியா மற்றும் மியான்மர் பாரம்பரியத்தை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் உள்ள பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு செல்லவிருப்பதை நான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நூறாண்டுகளுக்கும் மேலான வரலாற்றை கொண்ட மியான்மரில் வாழும் இந்திய வம்சாவளி சமூகத்தினரை சந்தித்து, கலந்துரையாட மிகவும் ஆவலாக உள்ளேன்.
இந்த பயணம் இந்திய-மியான்மர் உறவுகளில் பிரகாசமான புதிய அத்தியாயத்தை துவக்கும் என்றும், நமது அரசுகள், நமது வியாபார சமூகங்கள் மற்றும் மக்களிடமிருந்து மக்கள் அளவில் மேலும் நெருங்கிய கூட்டுறவிற்கான செயல்திட்டம் வகுத்திட உதவும் என்றும் நான் நம்புகிறேன்.”

******