பிரதமர் திரு. நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று இந்திய அரசின் 90 கூடுதல் செயலர்கள் மற்றும் இணை செயலர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார். இந்த கலந்துரையாடலுடன் திட்டமிடப்பட்ட ஐந்து கலந்துரையாடல்களும் நிறைவு பெற்றன.
இந்த கலந்துரையாடலின் போது, அதிகாரிகள், தங்கள் அனுபவங்களை குறிப்பாக, ஆளுமை, சமூக நலத்துறை, பழங்குடியினர் மேம்பாடு, வேளாண்மை, தோட்டக்கலை, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, கல்வி, திட்ட அமலாக்கம், நகர்புற மேம்பாடு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட தலைப்புகளில் பிரதமரிடம் பகிர்ந்து கொண்டனர்.
அதிகாரிகள் ஆளுமையை எளிமைப்படுத்தும் நடைமுறைகளை மேம்படுத்த பணியாற்றவேண்டும் என்று வலியுறுத்தினார். திட்டங்கள் மற்றும் செயல் திட்டங்கள் மாதிரி திட்டங்களாக திகழும் வகையில் அமைய வேண்டும் என்றும் அவர் கூறினார். அதன் மூலம் வெற்றி அடைய வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய நேர்மறையான சூழல் இந்தியாவிற்கு சாதகமாக இருப்பதை விவரித்த பிரதமர், அதிகாரிகள் புதிய இந்தியாவை 2025ம் ஆண்டுக்குள் உருவாக்கும் லட்சியத்தை நோக்கி பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
*****