Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

பெண் மோட்டர்பைக் ஓட்டுநர்கள் குழுவான பைக்கிங் குவீன்ஸ் பிரதமரை சந்தித்தனர்


குஜராத்தைச் சேர்ந்த ஐம்பது பெண் மோட்டார் பைக் ஓட்டுநர்கள் குழுவான `பைக்கிங் குவீன்ஸ்’ குழுவினர், பிரதமர் திரு. நரேந்திர மோடியை புது தில்லியில் இன்று சந்தித்தனர்.

இந்தக் குழுவினர், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் பத்தாயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்ததாகவும், `பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்’ திட்டம், தூய்மை இந்தியா திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்களைப் பற்றி மக்களுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தனர். கடந்த ஆகஸ்ட் 15ந் தேதியன்று லடாக்கில் உள்ள கார்டுங்லாவில் மூவண்ணக் கொடியை ஏற்றியதாகவும் அவர்கள் கூறினர்.

இந்தக் குழுவினரின் செயல்பாடுகளைப் பாராட்டிய பிரதமர், அவர்களின் வருங்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.

***