Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்


இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடல், “இந்தியாவை மாற்றும் ஊக்கிகளாக மாநிலங்கள்” என்ற தலைப்பில் தலைமைச் செயலாளர்களுக்கான தேசிய கருத்தரங்கின் பகுதியாக அமைந்தது. இத்தகைய கூட்டத்தில், இத்தகைய நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

தலைமைச் செயலாளர்கள் ஒவ்வொருவரும், தங்கள் மாநிலத்தின் சிறந்த நடைமுறை ஒன்றை குறித்து விரிவாக பேசினார்கள்.

ஊரக வளர்ச்சி, திறன் வளர்ப்பு, பயிர் காப்பீடு, சுகாதாரக் காப்பீடு, மூன்றாம் நிலை சுகாதார கவனிப்பு, மாற்றுத் திறனாளிக் குழந்தைகள் நலன், சிசு இறப்பு குறைப்பு, மலைவாழ் மக்கள் நல்வாழ்வு, திடக் கழிவு மேலாண்மை, சுகாதாரம், குடிநீர், ஆற்று நீர் சேகரிப்பு, நீர் மேலாண்மை, மின் ஆளுமை, ஓய்வூதிய சீர்திருத்தம், அவசர சேவைகள், கனிமவள பகுதிகளின் வளர்ச்சி, பொது விநியோகத் திட்டச் சீர்திருத்தம், மானியத்தை நேரடி பயன் மாற்றுதல், சூரிய சக்தி, கூட்டு வளர்ச்சி, நல்ல ஆட்சி மற்றும் வியாபார எளிமையாக்கல் போன்ற தலைப்புகளில் சிறந்த நடைமுறைகளை தலைமைச் செயலாளர்கள் எடுத்துரைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ஆட்சிமையில், முன்னுரிமை மற்றும் அணுகுதல் முக்கியமானவை என்றார். அவர், மாநிலங்களின் அனுபவங்களில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அவை பிரச்சினைகள் மற்றும் சவால்களுக்கு சிறந்த தீர்வை அளிக்கும் என்றார். அவர், உயர் அரசு அலுவலர்கள் சவால்களை எதிர்கொள்வதற்கான கூட்டுப் பார்வை மற்றும் திறன்களை பெற்றுள்ளதாக கூறினார். மேலும் அவர், இது தொடர்பாக, அனுபவ பகிர்வு மிக இன்றியமையாதது என்றார்.

பல்வேறு மாநிலங்களில் உள்ள இளம் அலுவலர்களைக் கொண்ட குழு, ஒவ்வொரு மாநிலத்திற்கும் சென்று இந்த சிறந்த நடைமுறைகள் குறித்து கலந்துரையாடி, கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். இவை, அந்த மாநிலங்களின் சிறந்த நடைமுறைகளை திறமையாக ஏற்றுக்கொள்வதற்கு உதவும் என்றார்.

‘போட்டி கூட்டுறவு கூட்டாட்சி’ என்ற கொள்கையை அலுவலர்கள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக் கொண்டார். மாவட்டங்கள் மற்றும் நகரங்களும் வளர்ச்சி மற்றும் நல்ல ஆட்சிக்கான போட்டியின் பகுதியாக இருக்க வேண்டும் என்றார். சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வெற்றிகளை, பெரிய மாநிலங்களில் உள்ள ஒரு மாவட்டத்தில் செயல்படுத்துவதுடன் தொடங்க வேண்டும். இது தொடர்பாக அவர், மண்ணெண்ணெய் இல்லாவையாக அரியானா மற்றும் சண்டிகர் உருவாகியுள்ளதை குறிப்பிட்டார்.

பிரதமர், பல்வேறு நீண்ட கால திட்டங்களுக்கு தீர்க்கமான உந்துதலை அளிக்கும் மாதந்திர பிரகதி கூட்டங்களை உதாரணமாக சுட்டிக் காட்டினார். அவர் மாநிலங்கள் வேறுபாடுகளிலிருந்து வெளிவந்து, மத்திய அரசுடனும், ஒருவருக்கொருவருடனும் கூட்டாக பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் மீது நம்பிக்கையையும், இந்தியாவிடமிருந்து எதிர்பார்ப்புகளையும் கொண்டுள்ளதுடன், இந்தியாவுடன் கூட்டாகவும் இணைந்து செயல்பட விரும்புகிறது என்ற பிரதமர் இது நமக்கு பொன்னான வாய்ப்பு என்றார் அவர். அவர், மாநிலங்களுக்கு அதிகமான முதலீட்டை பெற்றுத் தரும் என்பதால் “வியாபாரம் எளிமையாக்கல்”-க்கு மிகுந்த முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். அவர், மாநிலங்கள் பெருமளவிலான கண்டறியப்படாத வளர்ச்சித் திறன்களை கொண்டுள்ளன என்றார்.

குஜராத்தின் முதலமைச்சராக செயல்பட்ட தனது ஆரம்ப நாட்களையும், பூகம்பத்திற்கு பின்பாக கட்ச் பகுதி மீள்கட்டமைப்பு பணிகளையும் நினைவுக்கூர்ந்தார் பிரதமர். அந்நாட்களில் அலுவலர்கள் குழுவாக அர்ப்பணிப்புடன் பணியாற்றியதை பாராட்டினார். இந்த சூழலில், பண்டைய காலச் சட்டங்கள் மற்றும் விதிகளை முக்கியமாக அகற்றியதை அவர் குறிப்பிட்டார்.

விவசாயத் துறை குறித்து பேசிய பிரதமர், தொழில்நுட்பத்தின் பயன்பாடு அவசியமானது என்றார். பண்ணை உற்பத்தியில் கழிவினை அகற்றுதல் மற்றும் உணவு பதப்படுத்தலில் கவனம் ஆகியவற்றை வலியுறுத்தினார். விவசாய சீர்திருத்தம், குறிப்பாக இ-நாம், மீது மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

புதிய முனைப்புகளுக்கு நேர்மறையான அணுகுமுறையை அலுவலர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்திய. பிரதமர், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் தலைமை, சித்தாந்தங்களை கடந்து, புதிய, நேர்மறை யோசனைகளை எப்போதும் வரவேற்கும் என்றார்.

ஆதாரின் பயன்பாடு அனைத்து வகையிலும் நன்மையை கொண்டு வந்துள்ளதுடன், கசிவுகளை அகற்றியுள்ளது என்றார். நல்ல ஆட்சியின் நன்மைக்காக அதனை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்று கூடியிருந்தவர்களிடம் அவர் வலியுறுத்தினார். அவர், அரசு மின்-விற்பனைசந்தையிடம் (ஜி.இ.எம்.), திறன், சேமிப்பு மற்றும் அரசு கொள்முதலில் வெளிப்படைத்தன்மையை அளிக்கும் என்றார். அவர் அனைத்து மாநிலங்களும் ஆகஸ்ட் 15-க்குள் ஜி.இ.எம்.ஐ அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்”, என்ற தலைப்பில் உரையாற்றிய அவர், நம்மை ஒற்றுமையாக வைத்திருக்கும் காரணிகளை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்றார். அவர், இத்திட்டத்தில் அனைத்து தலைமைச் செயலாளர்களும் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

அரசுத் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி இலக்குகளின் வெற்றிக்கு நல்ல ஆட்சியே முக்கிய ஊக்கியாகும் என்றார் பிரதமர். மாநிலங்களில் உள்ள இளம் அலுவலர்கள் கள ஆய்வுகளில் போதிய நேரத்தை செலவிட வேண்டும் என்றும் அதன் மூலம் அவர்கள் களத்தில், நேரடியாக பிரச்சினைகளை அறிய இயலும் என்றார். நிறுவன நினைவக பாதுகாப்பின் முக்கியத்துவத்தை பிரதமர் எடுத்துரைத்தார். அவர், மாவட்டங்களில், அலுவலர்கள் அரசிதழ் எழுதுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றார்.

2022-ம் ஆண்டு, நாடு சுதந்திரம் பெற்று 75-வது ஆண்டு நிறைவடைவதை பிரதமர் குறிப்பிட்டார். அவர், இது கூட்டு உணர்வுடன், ஒவ்வொருவரும் ஒட்டுமொத்த வளர்ச்சி என்ற இயக்க இலக்குடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பாகும் என்றார்.
மத்திய திட்டத் துறை இணை அமைச்சர் – திரு.ராவ் இந்தர்ஜித் சிங், நிதி ஆயோக் துணை பெருந்தலைவர் – டாக்டர் அர்விந்த் பனகாரியா, நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் – திரு.அமிதாப் காந்த் மற்றும் அரசு, பிரதம மந்திரி அலுவலகம் மற்றம் மத்திய அமைச்சரவை செயலகத்தின் மூத்த அலுவலர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர்.