Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தனக்குக் கிடைத்த பரிசை ராணுவ நல நிதிக்காக வழங்கிய குவைத் வாழ் இந்திய மாணவர் ரித்தி ராஜ்

தனக்குக் கிடைத்த பரிசை ராணுவ நல நிதிக்காக வழங்கிய
குவைத் வாழ் இந்திய மாணவர் ரித்தி ராஜ்


குவைத் நாட்டில் வசிக்கும் இந்திய மாணவரான செல்வன். ரித்திராஜ் குமார் பிரதம மந்திரி திரு. நரேந்திர மோடியிடம் ரூ. 18 ஆயிரத்துக்கான காசோலையை ராணுவ நல நிதிக்காக வழங்கினார். அவர் ஆஸ்திரேலிய கல்வி ஆராய்ச்சி குழுமத்திடமிருந்து (ACER) 80 குவைத் தினார்களைப் பரிசாக வென்றார். இது அவர் நன்கொடையாக அளித்த நிதிக்கு (ரூ.18 ஆயிரம்) சமமாகும். செல்வன். ரித்திராஜ் குமார் இன்று தனது தாயுடன் சென்று, பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

குவைத்தில் உள்ள இந்திய கல்விப் பள்ளியின் மாணவரான அவர், ஆஸ்திரேலிய கல்வி ஆராய்ச்சி குழுமம் நடத்திய சர்வதேச தர சோதனைத் தேர்வில் சிறப்பாக வென்று கற்றல் மேம்பாட்டு விருதினைப் பெற்றார். செல்வன். ரித்திராஜ், கணிதம், அறிவியல் பாடங்களில் சிறந்த வகையில் தேர்ச்சி பெற்றார். அதன் மூலம் அவர் 80 குவைத் தினார்களைப் பரிசாக வென்றார்.

திரு. நரேந்திர மோடி செல்வன். ரித்திராஜின் தாராள மனப்பான்மையையும் கல்வியில் சிறந்த வகையில் தேர்ச்சி பெற்றதையும் பாராட்டினார். அவர் இது போல பல புதுமையான கல்வித் திட்டங்களை மேற்கொள்ள இருப்பது குறித்துப் பிரதமர் கேட்டறிந்தார்.

செல்வன். ரித்திராஜின் தாயார் திருமதி கிருபா பட், தான் “ஒவ்வொரு குழந்தையுமே மேதை” என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதாகவும், குழந்தைகளிடம் இருக்கும் திறன்களை அறியும் வகையில் இந்தியாவில் ஆசிரியர்களுக்கு இலவச கருத்தரங்குகள் மூலம் பயிற்சி அளிப்பதாகவும் பிரதமரிடம் தெரிவித்தார். புதுமையான கற்றல் முறைத் திட்டங்களைப் பரப்பி வரும் அவரது அர்ப்பணிப்பு உணர்வைப் பிரதமர் பாரட்டினார்.

***