1. பிரதமர் அலுவலகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி, பிரதமர் அலுவலகத்துக்கு உட்பட்ட அல்லது இதன் கட்டுப்பாட்டின் கீழான தகவல்கள் மற்றும் இதன் செயல்பாடு பற்றிய தகவல்கள் ஆகியவற்றை மட்டுமே இந்திய அரசின் (பணிகள் ஒதுக்கீடு) விதிகள் 1961 கீழ் அளிக்க பணிக்கப்பட்டுள்ளார்.1.
2. அமைச்சகங்கள் / மத்திய அரசின் துறைகள் தொடர்பானவை
அ) ஆர்டிஐ சட்டம், 2005ன்படி ஒருவர் கேட்கும் விவரம், மற்றொரு பொது ஆணையத்தின் முதன்மை செயல்பாடுகள் அல்லது அதைப்பற்றியதாக இருக்கும்பட்சத்தில், அதுபோன்ற விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட பொது ஆணையத்துக்கு அனுப்பிவைக்கப்படும். அதனால், விண்ணப்பதாரர்கள் அமைச்சகங்கள் / துறைகள் தொடர்பான குறிப்பிட்ட விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சகம் / துறையின் பொது தகவல் அதிகாரிக்கு நேரடியாக மனுக்களை அனுப்பி வைக்க அறிவுறுத்தப்படுகின்றனர். அதன் மூலம் அவர்களின் கோரிக்கைகள் விரைவாக பரிசீலிக்கப்படும். ஒருவேளை மத்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகள் ஆகியவற்றின் பணி ஒதுக்கீட்டில் சந்தேகங்கள் இருந்தால், விண்ணப்பதாரர்கள் இந்திய அரசு (பணிகள் ஒதுக்கீடு) விதிகள், 1961ஐ குறிக்கலாம். .
ஆ) இருப்பினும், பல்வேறு பொது ஆணையங்கள் பற்றிய தகவல்களை விண்ணப்பங்கள் கோரும்போது, (உதாரணத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சகம்/துறைகள் பற்றிய தகவல்களை பற்றி கேட்பது) அது சம்பந்தப்பட்ட பொது ஆணையத்துக்கு மாற்றப்படாது. மாறாக அதுபோன்ற ஆர்டிஐ விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
3. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பானவை: மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் பற்றிய தகவல்களை பெற, விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் கீழான பொது ஆணையத்துக்கு நேரடியாக விண்ணப்பிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4. மத்திய அரசின் அமைச்சகங்கள்/துறைகள் அல்லது மாநில அரசுகளின் கீழான பொது ஆணையங்களிடம் இருந்து தகவல்களை பெற விரும்புபவர்கள், சம்பந்தப்பட்டவர்களின் உரிய இணையதளத்தையும் பார்க்கலாம். இதற்கான இணையதள முகவரிகள், இந்திய அரசின் இணையதள டைரக்டரியில் குறிப்பிடப்பட்டுள்ளன..
5. மத்திய பொது தகவல் அதிகாரி (சிபிஐஓ) பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பில்லாத தகவல்களை தர முடியாது. மேலும், சிபிஐஓ கீழ்க்கண்டவற்றுக்கும் தேவைகளுக்கும் பதில் அளிக்க கடமைப்பட்டது அல்ல.:-
அ) அனுமான வரைபடங்கள்
ஆ) அனுமானங்களை உருவாக்கல்
இ) உள்நோக்கம் கொண்ட தகவல்கள்
ஈ) விண்ணப்பதாரர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளை சரிசெய்தல்
உ) பிற பொது ஆணையத்திடம் இருந்து தகவல் பெறுதல் அல்லது
ஊ) யூகங்களுக்கிடையேயான கேள்விகள்
6. பிரதமர் அலுவலகம் தொடர்பான அனைத்து தகவல்கள், பொதுமக்களின் நலன் கருதி, “தகவல்பெறும் உரிமை” மற்றும் பிற தலைப்புகளின் கீழ்”பிரதமர் அலுவலகத்தின் இணையதளத்தில்” கிடைக்கின்றன.” அதனால் விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் கிடைக்கும் தகவல்களை ஆராய்ந்த பின்னர், ஆர்டிஐ விண்ணப்பங்களை அனுப்பலாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.