Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இளைஞர் நலன் – விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்காக இந்திய பாலஸ்தீன நாடுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சரவைக் கூட்டத்தில் தகவல்


பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியா – பாலஸ்தீன நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) குறித்த விவரம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்துச் செயல்பட வகை செய்யும்.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதுடன், இரு நாடுகளும் தங்களுடைய புதிய சிந்தனைகள், மதிப்பீடுகள், கலாசாரம் ஆகியவற்றை சாதி, மத, பாலின பேறுபாடுகளைக் கடந்து பகிர்ந்து கொள்ள உதவும். இதன் பலனாக, இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் துணை புரியும்.

****