பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்புக்காக இந்தியா – ஜெர்மனி இடையேயான விருப்ப கூட்டு உடன்படிக்கையை (Joint Declaration of Intent) கையெழுத்திட, செயல்பாட்டுக்கு பிந்தைய ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த கூட்டு உடன்படிக்கை ஜூன் 1, 2017-ல் கையெழுத்தானது.
இந்த விருப்ப கூட்டு உடன்படிக்கையில், கீழ்க்காணும் பகுதிகளில் ஒத்துழைப்புக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது:-
அ. முதுநிலைக் கல்வி
ஆ. மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி
இ. மருந்துகள் மற்றும் மருந்துப் பொருட்கள் பொருளாதாரம்
ஈ. சுகாதாரத்துறை மதிப்பீடு
இந்த விருப்ப கூட்டு உடன்படிக்கையின் அமலாக்கத்தை மேற்பார்வையிடவும், ஒத்துழைப்புக்கான விவரங்களை மேலும் விவரிக்கவும் பணிக்குழு அமைக்கப்படும்.