Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

முதலீடுகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா-வங்காள தேசம் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கான கூட்டு விளக்க குறிப்புகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


முதலீடுகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா – வங்காளதேசம் இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்த கூட்டு விளக்க குறிப்புகளுக்கு (Joint Interpretative Notes – JIN), பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தெரிவிக்கப்பட்டது.

முதலீடுகளை ஊக்குவிக்கவும், பாதுகாக்கவும் இந்தியா – வங்காளதேசம் இடையே ஏற்கனவே உள்ள உடன்பாடுகளை தெளிவாக புரிந்துகொள்வதற்கு, கூட்டு விளக்க குறிப்புகள் உதவும். இந்த கூட்டு விளக்கக் குறிப்புகளில், பல்வேறு பிரிவுகளில் இருதரப்பும் இணைந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட விளக்கங்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, முதலீட்டாளர் குறித்த வரையறை, முதலீடு குறித்த வரையறை, உடன்பாட்டில் இடம்பெறாத வரிவிதிப்பு வழிமுறைகள், சரியான மற்றும் சமத்துவமான முறையில் கையாள்தல் (Fair and Equitable Treatment), தேசிய அளவில் கையாள்தல் (National Treatment), மிகவும் நெருக்கமான நாடுகளை (Most Favoured Nation) கையாள்தல், கையகப்படுத்துதல், அடிப்படையான பாதுகாப்பு நலன்கள், முதலீட்டாளர்களுக்கும், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளவர்களுக்கும் இடையேயான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பது ஆகியவை குறித்த விளக்கங்கள் இடம்பெற்றிருக்கும்.

முதலீடுகளுக்கான உடன்பாட்டு வழிமுறைகளை வலுப்படுத்துவதில், கூட்டு விளக்க அறிக்கைகள் கூடுதல் பங்களிப்பை செய்யும். இருதரப்பு முதலீட்டு உடன்பாடுகளில் பிரச்சினைகள் அதிகரித்து வருவதால், தீர்ப்பாயங்களுக்கு செல்வதற்கு முன்னதாக, இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவது வலுவான நடவடிக்கைகளாக இருக்கும். இதுபோன்ற தீவிரமான நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளுவதன் மூலம், சமரசத் தீர்ப்பாயங்களால், உடன்பாட்டு வழிமுறைகளை அதிக அளவில் கணித்து செயல்பட முடியும்.

*****