ஜெர்மனியில் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் ஜி20 மாநாட்டின் இடையே, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
முக்கிய திட்டங்கள் உள்ளிட்ட இருதரப்பு நல்லுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆய்வு செய்தனர். கடந்த 2016-ம் ஆண்டு நவம்பரில், பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டபோது, இரு தலைவர்களும் சந்தித்துக் கொண்டதற்குப் பிறகு ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து அவர்கள் ஆய்வு நடத்தினர். கடந்த ஆண்டு நவம்பருக்குப் பிறகு, இருதரப்பு நல்லுறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் திருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.
அடுத்த வருடாந்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் அபே, இந்தியாவுக்கு வர உள்ளதை, ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்தார். இது தங்களது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று திரு.நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.
Furthering India-Japan ties...Prime Ministers @narendramodi and @AbeShinzo meet on the sidelines of the G20 Summit. pic.twitter.com/MgHnJ9y3Ds
— PMO India (@PMOIndia) July 7, 2017