உங்களது கனிவான வார்த்தைகளுக்கு நன்றி அதிபர் மைக்கேல்.
உங்களது இந்த அருமையான விருந்தோம்பலும் அரவணைப்பும் என் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனது இந்த பயணம் மிக குறுகிய காலம் என்பதில் நான் மிகவும் வருந்துகிறேன். எனக்கு இங்கு நீண்ட நாட்கள் தங்க ஆசையாக உள்ளது. இந்த அழகான நாட்டிற்கு வருகை தரும் அனைவருக்குமே இந்த நாட்டைவிட்டு வெளியே செல்வது மிகவும் கடினமானது.
இது குறுகிய கால பயணமாக இருப்பினும் மிகுந்த நன்மை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள நாடுகளில் நான் பயணம் மேற்கொள்ளும் முதல் நாடு செசல்ஸ் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
நாங்கள் எங்கள் இந்தியப் பெருங்கடல் அருகில் உள்ள நட்பு நாடுகளில் ஒரு முக்கிய நாடாக செசல்ஸ் நாட்டை கருதுகிறோம்.
நமது உறவு தனித்தன்மை உடையது, மிகவும் சிறப்பானது. இருநாடுகளுக்கும் இடையே உள்ள நம்பிக்கையை அடிப்படையாக கொண்டு உருவாகியது நமது உறவு. மரியாதை சமத்துவத்தை அளிக்கக்கூடியது.
அது ஜனநாயகம் மற்றும் அனைவரையும் உள்ளடக்குதல் போன்ற நமது முறைகள் வலிமை சேர்க்கிறது. மேலும் இந்த உறவு, நம் மக்களின் முன்னேற்றம் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் அமைதி மற்றும் வளமை ஆகிய பொதுவான நோக்கம் மூலம் பராமரிக்கப்படுகிறது.
செசல்ஸ் நாடு பெரிய அளவில் முன்னேற்றத்தை கண்டுள்ளது. அது சாதனைகள் புரிவதற்கு நாட்டின் அளவு ஒரு தடை இல்லை என்று உலகுக்கு எடுத்துரைத்துள்ளது.
எனது இந்த வருகையும் அதிபர் மைக்கேல் உடனான உரையாடளும் நமது உறவு மேலும் பலப்படவேண்டும் என்பதை வலியுறித்தியுள்ளது.
பாதுகாப்பு அளவிலான நமது கூட்டமைப்பு மிகவும் பலமாக இருக்கிறது. இது இந்திய பெருங்கடல் பகுதியில் கரையோரப் பாதுகாப்பை பலபடுத்த வேண்டும் என்ற நமது பொறுப்பை நிறைவேற்ற உதவியது.
பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்காக செசல்ஸ் நாட்டுடன் கூட்டுறவு வைத்துக்கொள்வது எங்களுக்கு பெருமை அளிக்கிறது.
இன்று, நாங்கள் செசல்ஸ்-க்கு இன்னும் ஒரு டோர்னியர் விமானத்தை கொடுக்கப் போகிறோம் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
பின்னர், இன்று நான் கரையோர கண்காணிப்பு ராடார் திட்டத்தை தொடங்கிவைப்பதில் பெருமை அடைகிறேன். இது நமது கூட்டுறவிற்கான மற்றொரு சின்னமாக உள்ளது.
இந்த வழிமுறைகளை இதுபோன்ற அழகான தீவுகளையும் அதைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும் பாதுகாக்க உதவும். மேலும், இந்தியப் பெருங்கடல் பகுதியின் பாதுகாப்பிறகு செஷல்ஸ் தனது மகத்தான பங்களிப்பை தொடர்ந்து அளிக்கும்.
நீரப்பரப்பு ஆய்வில் இன்று நாம் செய்துள்ள ஒப்பந்தம் கடற்பகுதியில் உள்ள நமது ஒத்துழைப்பிற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்துள்ளது.
இந்தியா, மலைத்தீவு மற்றும் இலங்கை இடையேயான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பில் செசல்ஸ்ஸும் விரைவில் ஒரு முழு பங்குதாரராக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
இந்திய பெருங்கடல் பகுதியில் விரிவான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அதிபர் மைக்கேலும் நானும் வலியுறுத்தியுள்ளோம். இந்தியப் பெருங்கடல் ரிம் கூட்டமைப்பிலான நமது ஒத்துழைப்பு மேலும் வலுவடையவேண்டும் என்று நான் உறுதி ஏற்றுள்ளோம்.
நம் இருதரப்பு உறவிற்கு நமது வளர்ச்சிக்கான ஒத்துழைப்பும் முக்கிய தூணாக உள்ளது.
இந்த தீவின் உள்கட்டமைப்பை மேம்பாட்டிற்காக நாம் இன்று செய்துள்ள ஒப்பந்தம் நமது கூட்டுறவிற்கு ஒரு வலுவான ஊக்கத்தை அளிக்கிறது.
செசல்ஸ் நாட்டின் மனித வள மேம்பாடு மற்றும் திறன் வளர்ச்சியில் பங்கு அளிப்பது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையில், இந்த துறையில் இந்தியாவின் உதவியை பெற்ற நாடுகளில் செசல்ஸ் மிக முக்கியமானது. எதிர்காலத்தில் இதனை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
கடல் வள பொருளாதாரத்தில் செசல்ஸ் முதன்மை வகிக்கிறது. வரும் காலத்தில் எதிர்கொள்ள வேண்டிய சாவல்களை சமாளிக்க கடல் பொருளாதாரம் மிகவும் முக்கியம் என்பதை நாமும் நம்புகிறோம்.
கடல் வள பொருளாதாரத்தில் நமது ஒத்துழைப்பை விரிவு படுத்த கூட்டு செயல்பாட்டுக் குழு ஒன்றை அமைக்க இன்று அதிபர் மைக்கேலும் நானும் ஒப்புக்கொண்டுள்ளோம்.
இந்த ஒத்துழைப்பு கடல் சுற்றுச்சூழல் மற்றும் வளங்கள் பற்றிய நமது புரிதலை அதிகரிக்கும். கடல் வளங்களை நிலையான மற்றும் சீரான முறையில் பயன்படுத்த புதிய சாத்தியங்களையும் திறமைகளையும் நம்மால் மேம்படுத்த முடியும்.
அறிவியல் மற்றும் பொருளாதார துறையில் உள்ள நமது ஒத்துழைப்பை மேம்படுத்த இது முக்கியமாகும்.
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்க வலியுறுத்தியுள்ளோம். இதை எளிதில் அடைய முடியும் என்று நம்பிக்கை இருக்கிறது. செசல்ஸ் நாடு குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், சேவைகள் துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மானியமாகக் கொடுக்கப்பட்டுள்ள 75 மில்லியன் டாலர்களை செசல்ஸ் விரைவில் பயன்படுத்தும் என்று நான் நம்பிக்கை தெரிவித்துள்ளேன்.
நம் மக்கள் இடையே உள்ள நெருக்கமான மற்றும் ஆழமான உறவுகளை நாங்கள் மதிக்கிறோம். கடந்த டிசம்பர் மாதம் செசல்ஸ் இந்தியாவிற்கு நேரடி விமான சேவை துவக்கியுள்ளதை நான் வரவேற்றேன்.
செசல்ஸ் குடிமக்களுக்கு மூன்று மாத இலவச விசா வழங்க நாங்கள் முடிவெடுத்துள்ளோம். மேலும் செசல்ஸ் மக்கள் வருகையின்போது விசா அளிக்கும் வசதியை நாங்கள் வழங்க உள்ளோம்.
சர்வதேச அமைப்புகளில் செசல்ஸ் நாடு இந்தியாவுக்கு அளித்து வரும் ஆதரவிற்காக நான் அதிபர் மைக்கேலுக்கு நன்றி தெரிவித்தேன். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஒப்புதல் அளித்துள்ளதும் இதில் அடங்கும்.
பருவநிலை மாற்றம் குறித்த கருத்துகளில் நமக்கு ஒருமித்த எண்ணங்கள் பிரதிபலித்துவருகிறது. அதன் தாக்கத்தால் பாதிக்கப்படும் இரு நாடுகள் நாம். மேலும், நாம் இதை எதிர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.
தேசிய அளவில் வலுவான நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். நாங்கள் பருவநிலை மாற்றத்தை எதிர்த்து ஒரு வலுவான முயற்சியை உலகம் குறிப்பாக வளர்ந்த நாடுகள் எடுக்க அழைப்பு விடுத்துள்ளோம்.
நமது உறவு நட்பு மற்றும் கூட்டமைப்புக்கு ஒரு நல்ல உதாரணம் ஆகும். இந்தியா இந்த உறவை வெகுவாக மதிக்கும்.
அதிபர் மைக்கேல் இந்தியாவிற்கு விரைவில் வருகை தருவார் என்று காத்திருக்கிறோம்.
நன்றி!.