பிரதமர் திரு. நரேந்திர மோடி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ரோட்டோ வைரஸ் தடுப்பூசியை இன்று துவக்கி வைத்தார். வயிற்று போக்கால் ஏற்படும் சிசு மரணத்தை எதிர்த்து போராட இந்த உள்நாட்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசி உதவும்.
ஒவ்வொரு ஆண்டும், ரோட்டோ வைரஸால் ஏற்படும் வயிற்றுபோக்கால், 10 லட்சம் பேர் வரை மருத்துவமனயில் அனுமதிக்கப்படுகின்றனர், இதனால் 5 வயதிற்கும் குறைந்த 80 ஆயிரம் குழந்தைகள் உயிர் இழக்கின்றனர். குடும்பங்களுக்கு இது மண அழுத்தத்தை தருவதோடு, அவர்களை வருமை கோட்டிற்கு கீழ் இந்த பிரச்சனை தள்ளுகிறது. இது நாட்டின் பொருளாதாரத்திலும் சுமையை கூட்டுகிறது.
முதன்மை ஆய்வு முதல் பொருள் வளர்ச்சி வரை இந்தியாவில் இந்த மேம்பட்ட முதல் உள்நாட்டு ரோட்டோ வைரஸ் தடுப்பூசியை தயாரிப்பதில் ஈடுபட்ட அனைத்து பங்குதாரர்களையும் பிரதமர் பாராட்டினார். மேம்பட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தி, உயர்தர ஆய்வு, வளர்ச்சி ஆகியவற்றில் இந்தியாவின் திறனை குறிக்கும் இந்த முயற்சி ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என்று பிரதமர் பாராட்டினார். சமூதாய சவால்களுக்கு திறன்மிக்க பொது தனியார் பங்கேற்பு மாதிரி முறையில் அனைவராலும் அணுகக்கூடிய தீர்வை கண்டுப்பிடித்ததையும் பாராட்டினார்.
பெரிய நிலப்பரப்பும் பன்முகத்தன்மையும் கொண்ட இந்தியா, பல்வேறு சமூதாய பொருளாதார சவால்களையும் சந்தித்து வருகின்றது. ரோட்டோ வைரஸ் தடுப்பூசி வளர்ச்சி, மருத்துவ அறிவியல் மட்டுமின்றி, மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பத் துறையிலும் உயர்நிலை ஆராய்ச்சியையும், வளர்ச்சியையும், உற்பத்தியையும் இந்தியாவில் ஊக்குவிக்கும். இந்தியாவின் கண்டுபிடிப்புகள் உலகத்திற்கே பொருத்தமாக இருக்கும். முக்கியமாக, வளர்ந்துவரும் உலகிற்கு பொருத்தமாக இருக்கும் என்று நம்புவதாக பிரதமர் தெரிவித்தார்.
இந்த தடுப்பூசி, சாதாரண குடிமக்கள் பயன்பெறும் வகையில் இந்தியா அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதையும் பிரதமர் தெரிவித்தார். இந்த தடுப்பூசி பொது தனியார் பங்கேற்பு மாதிரி முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகம், அமெரிக்க அரசின் பல்வேறு நிறுவனங்கள், பல்வேறு அரசு நிறுவனங்கள், இந்தியாவில் உள்ள அரசு சாரா அமைப்புகள், பில் மற்றும் மேலிண்டா கேட்ஸ் உதவும் அமைப்பு ஆகியவை இதில் பங்கேற்றனர்.
இந்தியாவில் நடைபெற்ற கல்வி, அறிவியல் நிறுவனங்களின் முதல்கட்ட ஆராய்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கியது. அமெரிக்க அரசின் தேசிய சுகாதார நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களும் இதற்கு உதவின. கேட்ஸ் அமைப்பும் பாரத் பயோடேக் இந்திய நிறுவனமும் பொருள் வளர்ச்சிக்கும் சோதனைக்கும் பங்களித்தன. இன்று வெற்றிகரமாக துவக்கப்பட்டுள்ள / அறிமுகம் செய்யப்பட்டுள்ள தடுப்பூசி கடந்த 25 ஆண்டுகளின் அசாதாரண முயற்சியின் விளைவாகும்.
தடுப்பூசியின் வளர்ச்சி உற்பத்தியில் ஈடுபட்ட பாரத் பயோடேக் நிறுவனம் 1997-1998ல் இந்திய-அமெரிக்க தடுப்பூசி செயல் திட்டத்தாலும் குறிப்பிட்ட அரசு முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்டது. தடுப்பூசியின் விலையை ஒரு அமெரிக்க டாலராக நிர்ணயிக்க இந்த நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. உலக அளவில் ரோட்டோ வைரசுக்கு எதிராக கிடைக்கப்படும் மூன்றாவது தடுப்பூசி இது. தற்போது இதுவே மிக மனிவானதாகும். மத்திய அமைச்சர்கள் திரு. வெங்கய்யா நாயுடு மற்றும் திரு. ஹர்ஷ் வர்தனும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்