Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

அகமதாபாதில் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

அகமதாபாதில் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில்
பிரதமர் பங்கேற்றார்

அகமதாபாதில் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவில்
பிரதமர் பங்கேற்றார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி குஜராத் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகளில் இன்று பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “மகாத்மா காந்தியின் எண்ணங்கள், சிந்தனைகள் இன்று உலகம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கும் ஆற்றல் கொண்டவை” என்றார்.

“நமது சமூகம் நமது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமானது. மகான் ஸ்ரீமத் ராஜ்சந்தர்ஜியின்  150ஆவது ஆண்டு நடைபெறும் இந்த சமயத்தில் அவரது வாழ்க்கை, சிந்தனைகள் குறித்து தொடர்ந்து கல்வி ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்” என்றார்.

“தூய்மையாக இருப்பது நமது பழக்கமாக மாற வேண்டும். அவ்வாறு அமைவது 2019ம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 150ஆவது ஆண்டு விழாவில் அவருக்குச் செலுத்தும் சரியான அஞ்சலியாக அமையும்” என்றார்.

அனைத்து மக்களும் சபர்மதி ஆசிரமத்துக்கு வருகை தரவேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

பசு பாதுகாப்பு குறித்துப் பேசிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, “இது அஹிம்சையைக் கடைப்பிடிக்கும் மண். மகாத்மா காந்தியின் மண்ணில் வாழ்கிறோம். மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பவே ஆகியோரை விட வேறு யாரும் பசுவைப் பாதுகாப்பது குறித்துப் பேசியதில்லை. அதைப் போல் பசு பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், பசுவைப் பாதுகாப்பதாக (கௌ பக்தி) கூறிக் கொண்டு மனிதர்களைக் கொல்வது ஏற்கத் தக்கதல்ல. இது மகாத்மா காந்தியே ஏற்காதது.

சமூகத்தில் வன்முறைக்கு இடமேயில்லை. இந்த நாட்டில் யாரும் சட்டத்தைத் தனது கைகளில் எடுத்துக் கொள்ள உரிமையில்லை” என்றார்.

மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டும். மகாத்மா காந்தி கண்ட கனவுகளின்படி, நமது சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பெருமைப்படத் தக்க இந்தியாவை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

 

***