Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

சவுராஷ்டிர நர்மதா பாசன திட்டத்தின் கீழ்

சவுராஷ்டிர நர்மதா பாசன திட்டத்தின் கீழ்

சவுராஷ்டிர நர்மதா பாசன திட்டத்தின் கீழ்

சவுராஷ்டிர நர்மதா பாசன திட்டத்தின் கீழ்


பிரதமர் மந்திரி திரு. நரேந்திர மோடி ராஜ்கோட் அருகே சவுராஷ்டிர நர்மதா பாசனத் திட்டத்தின் கீழ் (சௌனி) அஜி அணைக்கட்டில் நதிநீரைத் தேக்கும் திட்டத்தை இன்று தொடங்கிவைத்தார்.

அணைக்கட்டு திறப்பு விழாவை ஒட்டி பொதுமக்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, “ஒரு காலத்தில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டினால் தத்தளித்த குஜராத் மாநிலம் இன்று பெரிய முன்னேற்றத்தைக் கண்டுள்ளது“ என்று குறிப்பிட்டார்.

குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் கடந்த இருபது ஆண்டுகளில் பல சாதகமான பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றார் பிரதமர்.

“இன்று ஏராளமானோருக்கு நீர் கிடைக்கிறது. மேலும், முன்னேற்றத்தை வரவேற்பதற்கான பல கதவுகள் திறக்கப்படும்” என்று குறிப்பிட்ட பிரதமர், “தண்ணீரை மக்களுக்கு எவ்வளவு விரைவாக வழங்க முடியுமோ அவ்வளவு விரைவாக வழங்குவது அரசின் முன்னுரிமையாக இருக்கிறது. அதே சமயம், தண்ணீரை எந்த அளவு முடியுமோ அந்த அளவுக்குப் போதிய அளவு கவனமாகவும், சேமிப்புக்கும் வகையிலும் கையாள வேண்டும்” என்று மேலும் கூறினார்.

தண்ணீர் சேமிப்பு முறைகளில் புதிய தொழில்நுட்ப முறைகளைக் கையாள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

 

***