Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைக்க அமைச்சரவை ஒப்புதல்


இந்திய சைகை மொழி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சங்கங்கள் பதிவுச் சட்டம், 1860-ன் கீழ் இந்த மையம் ஒரு சங்கமாக அமைக்கப்படும். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகத்தின் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறையின் கீழ் இந்த மையம் செயல்படும். இந்த மையம் முதலில் புது தில்லியில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிறுவனத்தில் துவக்கப்படும்.

இந்த முடிவினால் இந்தியாவில் உள்ள ஐந்து மில்லியன் காது கேளாதோர் பயன் பெறுவர். இதன் மூலம் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் கல்விக் கூடங்கள், வேலை அலுவலகங்கள் மற்றும் ஏனைய பொது இடங்களில் இயல்பாக பழக உதவும்.

ஒரு தலைவர் மற்றும் 12 பொது குழு உறுப்பினர்கள் கொண்ட சங்கமாக இந்த மையம் அமையும். மேலும் இதில் ஒரு செயல் குழு இருக்கும். அதில் ஒரு தலைவர், ஒன்பது உறுப்பினர்கள், சில முன்னாள் அலுவலர்கள் மற்றும் பலர் பங்குபெறுவர். இந்திய சைகை மொழி தொடர்பான தேசிய அளவிலான நிறுவனங்களின் நிபுணர்கள், கல்வியாளர்கள் இதில் பங்குபெறுவர்.

காது கேளாதவர்களுக்கான இந்திய சைகை மொழி மற்றும் இது தொடர்பான தேவைகள் அலட்சியப்படுத்தப்பட்டு வந்தது. இந்த பிரச்சினைகளை காது கேலாதவர்களுக்காக பணிபுரியும் பல்வேறு நிறுவனங்கள் ஆவணப்படுத்தின. இந்திய சைகை மொழியை பரப்பவும் இது தொடர்பான கல்வி வளர்ச்சி மற்றும் பயிற்சிக்கு மத்திய அரசு வழிவகுக்கும். சைகை மொழியின் மொழிபெயர்ப்பு, ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் அதற்கான நவீன தொழில்நுட்பங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கும். இதன் மூலம் செவித் திறன் குறைபாடு உள்ளவர்கள் மற்றவர்களை போல் இயல்பான வாழ்கையை வாழ முடியும்.

•••••