Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

லக்னோவில் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

லக்னோவில் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

லக்னோவில் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

லக்னோவில் வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் தொடங்கி வைக்கிறார்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தொடங்கி வைத்து 400 கி. வாட் லக்னோ – கான்பூர் நேர்திசை மின்னோட்ட கடத்தி இணைப்புகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும் பிரதமர் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு இசைவாணைக் கடிதங்களை அவர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய இளைஞர்களை சமீபத்திய தொழில்நுட்பத்துடன் இணைப்பது பற்றி விவரித்தார். சுகாதாரத்துறையில் குறிப்பாக சுகாதார உபகரணங்களை புதிதாக கண்டுபிடிப்பது குறித்து நமது இளைஞர்கள் சிந்திக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.

எல்லா மாவட்டங்களிலும் மின் இணைப்பு வழங்கியதற்காக உத்தரப்பிரதேச அரசை பிரதமர் பாராட்டினார். மேலும் ஒரு நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு மின்சாரமும் எரிசக்தியும் இன்றியமையாதவை எனக் கூறினார். இந்தியாவில் தற்போது சூரிய ஆற்றல் பயன்பாடு அதிகரித்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

ஜூலை 1 – ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் ஜி.எஸ்.டி. குறித்தும் விரிவாக விவரித்த பிரதமர், இது ஜனநாயகத்தின் பலத்தை வெளிப்படுத்தியது என்றும் கூறினார். ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படுவதற்கான எல்லா பெயரும் புகழும் 125 கோடி இந்தியர்களையே சாரும் என்றும் பிரதமர் கூறினார்.

*****