புத்த மதத்தினரின் புனிதமான ஆவணங்களான உர்ஜா கஞ்சூரின் 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளை, புனித பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள டட்சன் குன்செகோய்னி புத்த ஆலயத்தின் தலைமை துறவியான புத்தா பல்சீவிச் பத்மயே-விடம் பிரதமர் திரு.நரேந்திர மோடி அன்பளிப்பாக வழங்கினார்.
1955-ம் ஆண்டில் பேராசிரியர் ரகு வீரா, திபெத்திய புனித ஆவணமான கன்ஜூரின் உர்ஜா பிரிவில், ஒட்டுமொத்தமாக 104 பகுதிகளைக் கொண்ட தொகுப்பை, இந்தியாவுக்கு கொண்டுவந்தார். அதில், ஒரு பகுதி, விவரப் பட்டியலை கொண்டிருந்தது. இது கொண்டுவரப்பட்டபிறகே, திபெத்திய கன்ஜூர் குறித்து தெரியவந்தது. இதனை பேராசிரியர் ரகு வீராவிடம், மங்கோலிய நாட்டின் பிரதமர், தனிப்பட்ட விவரப் பட்டியலாக வழங்கினார்.
இந்த கஞ்ஜூர், 1908-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டுவரை மங்கோலியாவின் கடைசி ஜிப்கன்தம்பாவின் மேற்பார்வையில் திருத்தியமைக்கப்பட்டது. டெர்ஜ் மற்றும் இரண்டு சீனப் பதிவுகளுடன் (Rgya-par-mag Uis) ஒத்து இருந்தது. பழைய தொகுப்பான Hphan-than-ma அடிப்படையிலான Tshal-pa Kanjur தன்மையைக் கொண்டிருந்தது. மரத்தால் செதுக்கப்பட்ட நம்மால் அறியப்பட்ட பதிப்புகளின் அளவை விட, இதன் அளவு (35×25 செ.மீ.) சிறியது.
PM presents Urga Kanjur to Jampa Donor, Buda Balzheivich Badmayev, Head Priest, Datsan Gunzechoinei Buddhist Temple, St Petersburg. pic.twitter.com/TINSiWKCDH
— PMO India (@PMOIndia) June 2, 2017