Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்


இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் மற்றும் உடைமைகளை இழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக உயிர் மற்றும் உடைமகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கு இந்தியா இரங்கல் தெரிவிக்கிறது.

நமது இலங்கை சகோதர சகோதரிகளுடன் இந்த நேரத்தில் நாம் துணை நிற்போம்.

நிவாரணப் பொருட்களுடன் நமது கப்பல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. முதல் கப்பல் கொழும்பு நகரை சனிக்கிழமை காலை சென்றடையும்.

இரண்டாவது கப்பல் ஞாயிற்றுக்கிழமை சென்றடையும். மேலும் உதவிகள் வழங்கப்படுகின்றன.” என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

*****