கீழ் உயிர்ப்பான வெளிப்படுத்தல் என்ற பகுதி அமைந்துள்ளது.
கேள்வி .1: | எனது குறைகள் குறித்த மனுவை மாண்புமிகு பிரதமருக்கு அனுப்ப விரும்புகிறேன். இதற்கான நடைமுறைகல் குறித்து எனக்கு விளக்கம் தரவும்.
பிரதமர் அலுவலகத்தில் எனது குறைகள் குறித்த மனுவை எவ்வாறு பதிவு செய்வது? பிரதமர் அலுவலகத்தில் எனது குறைகள் குறித்த மனுவை நான் எங்கே அனுப்பி வைப்பது? பிரதமரிடம் எனது குறைகள் குறித்த மனுவை நான் சமர்ப்பிக்கலாமா? |
பதில்: | பிரதமர் அலுவலகத்திற்கான https://www.pmindia.gov.in/ta/->‘இணைய தளத்தில் உள்ள மாண்புமிகு பிரதமருடன் உரையாடுங்கள்’ என்ற இணைப்பை பயன்படுத்தி மாண்புமிகு பிரதமருக்கோ/ பிரதமர் அலுவலகத்திற்கோ எந்தவித குறையையும் அனுப்பலாம். மேலும் இந்த இணைப்பு பிரதமர் அலுவலக இணைய தளமான https://www.pmindia.gov.in/ta/ என்ற முகவரியின் முதல் பக்கத்திலேயே உள்ள ‘பிரதமருக்கு எழுதுங்கள்’.என்பதாக அமைந்துள்ளது.
மேற்குறித்த இணைப்பைச் சொடுக்கியதும், மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைகளை நீக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பகுதிக்கு மனுச் செய்வோரை அது இட்டுச் செல்லும். அங்கு குறைகள் பதிவு செய்யப்படும். குறையானது பதிவான பிறகு பிரத்தியேகமான பதிவு எண் உருவாக்கப்படும். தாங்கள் அளித்த குறைகள் பற்றிய விவரத்தோடு, அவை தொடர்பான ஆவணங்களையும் மேலேற்றுவதற்கான வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. குடிமக்கள் தங்கள் குறைகளை மாண்புமிகு பிரதமருக்கோ/ பிரதமர் அலுவலகத்திற்கோ கீழ்க்கண்டவாறு வேறு வழிகளிலும் அனுப்பி வைக்கலாம்: (அ) தபால் மூலம் எனில் – பிரதமர் அலுவலகம், சவுத் பிளாக், புதுதில்லி – 110011 (ஆ) நேரடியாக எனில் – பிரதமர் அலுவலக தபால் பிரிவு, சவுத் பிளாக், புதுதில்லி மற்றும் (இ) தொலைநகலி எனில் – நகலி எண்: 011 – 23016857 |
கேள்வி .2: | மாண்புமிகு பிரதமருடன் எனது கருத்துக்களை எவ்வாறு பகிர்ந்து கொள்வது?
மாண்புமிகு பிரதமருக்கு ஒரு சில யோசனைகளை தெரிவிக்க விரும்புகிறேன்? |
பதில்: | பிரதமர் அலுவலக இணைய தளமான https://www.pmindia.gov.in/ta/ என்ற முகவரியின் முதல் பக்கத்தில் உள்ள”உங்கள் கருத்துக்களை, நுண்ணறிவை, சிந்தனைகளை பகிர்ந்து கொள்ளுங்கள்” என்ற இணைப்பைப் பயன்படுத்தி தங்கள் கருத்துக்களையும், நுண்ணறிவையும் அல்லது சிந்தனைகளையும் https://www.pmindia.gov.in/ta/ -> ‘இணைய தளத்தில் உள்ள மாண்புமிகு பிரதமருடன் உரையாடுங்கள்’ மூலம் குடிமக்கள் பகிர்ந்து கொள்ளலாம்.
(அ) தபால் மூலம் எனில் – பிரதமர் அலுவலகம், சவுத் பிளாக், புதுதில்லி – 110011 (ஆ) நேரடியாக எனில் – பிரதமர் அலுவலக தபால் பிரிவு, சவுத் பிளாக், புதுதில்லி மற்றும் (இ) தொலைநகலி எனில் – நகலி எண்: 011 – 23016857 |
கேள்வி .3: | மாண்புமிகு பிரதமருக்கோ அல்லது பிரதமர் அலுவலகத்திற்கோ தன்னால் அனுப்பி வைக்கப்பட்ட குறைகள் அடங்கிய மனுவின் நடப்பு நிலையை எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்
இந்த நாள்/ மாதம்/ வருடத்தில் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட குறைகள் குறித்த எனது மனுவின் மீது எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பது குறித்து எனக்கு தயவுசெய்து தெரிவியுங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு நான் மனு ஒன்றை அளித்திருந்தேன்.அந்த மனு பிரதமர் அலுவலகத்தால் கடித எண் பிஎம்ஓபிஜி/டி/ஆண்டு/123456789 தேதி: தேதி/மாதம்/வருடம் மூலம்… மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மனுவின் தற்போதைய நிலை குறித்து தயவு செய்து எனக்குத் தகவல் தெரிவிக்க வேண்டுகிறேன். தேதி/மாதம்/வருடம் அன்று மாண்புமிகு பிரதமருக்கு இணையம் மூலமாக எனது குறைகள் குறித்த மனு ஒன்றை அளித்திருந்தேன். அதன் பதிவு எண். எண். பிஎம்ஓபிஜி/ஈ/வருடம்/ 123456789. எனது மேற்கண்ட மனு மின்னணு முறையில் …… அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனது மனுவில் எழுப்பியிருந்த பிரச்சனை தீர்க்கப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன். |
பதில்: | பிரதமர் அலுவலகம் பொதுமக்களிடமிருந்து பெரும் எண்ணிக்கையிலான குறைகள் குறித்த மனுக்களை பெறுகிறது. இந்தக் குறைகள் மாநிலங்களின் /யூனியன் பிரதேசங்களின் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள் ஆகியவற்றின் வரம்பிற்குள் [ 48KB ] வரும் விஷயங்களை கொண்டதாக உள்ளன. பிரதமர் அலுவலகத்தில் மக்கள் பிரிவில் இதற்கெனவே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள குழுவினரால் வழிகாட்டி விதிமுறைகளின்படி குறைகள் அடங்கிய இந்த மனுக்கள் பிரதமர் அலுவலகத்தின் வகைபிரிக்கப்படுகின்றன. இவ்வாறு கடிதங்களை வகைப்படுத்தும்போது அவற்றின் தன்மை, உள்ளடக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப பிரதமர் உள்ளிட்டு மூத்த அதிகாரிகள்/ அதிகாரிகள் ஆகியோரை அவர்கள் கலந்து ஆலோசிக்கின்றனர். இதன்படி, நடவடிக்கை எடுக்கக் கூடிய மனுக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் (அமைச்சகங்கள்/துறைகள்/ மாநில அரசுகளுக்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காக மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைகளை நீக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பகுதிக்கு, இந்த மனுவிற்கான பதிலை சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு அனுப்பி வைக்குமாறும், அதன் ஒரு நகலை இணையதளத்தில் பதிவேற்றுமாறும் கோரி அனுப்பி வைக்கப்படும். மேலே குறிப்பிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்பட முடியாதவை என்று கருதப்படும் மனுக்கள் பதிவேடுகளில் பதிவு செய்யப்படும்.
தபால்மூலமாக/நேரடியாக/தொலைநகலியின் மூலமாக என நேரடியாக வழங்கப்பட்ட மனுக்களில் நடவடிக்கை எடுக்கத்தக்கவை என்று கருதப்படும் மனுக்கள் இணையம் மூலமாக மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைகளை நீக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பகுதிக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்படுவதுடன், இது குறித்த தகவல் கடிதம் மூலமாகவும் அனுப்பி வைக்கப்படும். இந்த மனு தொடர்பான பிரத்தியேகமான பதிவு எண் ஒன்று உருவாக்கப்பட்டு அந்த எண் அனுப்பி வைக்கப்படும் கடிதம் மற்றும் ஒப்புகைக் கடிதம் ஆகியவற்றில் குறிப்பிடப்படும். இந்த ஒப்புகைக் கடிதம் மனுதாரருக்கு கடிதம் மூலமாக அனுப்பி வைக்கப்படும். மேலும் மனுதாரர் தனது மனுவில் இமெயில்/கைபேசி எண்ணை குறிப்பிட்டிருந்தால், இமெயில்/குறுஞ்செய்தி மூலமாக மனுதாரருக்கு ஒப்புகை குறித்த தகவல் அனுப்பி வைக்கப்படும். மனுதாரர் http://pgportal.gov.in/Status என்ற இணைய தளத்தில் இவ்வாறு தனக்கு அளிக்கப்பட்டுள்ள பிரத்தியேக பதிவு எண்ணைக் குறிப்பிட்டு தனது குறை குறித்த நடவடிக்கையின் தற்போதைய நிலையை அறிந்து கொள்ளலாம். அந்த மனுவின் மீது அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், மனுதாரருக்கு அதன் மீது அனுப்பி வைக்கப்பட்ட பதில் ஆகியவையும் இந்த இணைய தளத்தில் பதிவேற்றப்படும். மேலும் பொதுமக்கள் பிரிவுக்கான வசதி எண் 011-23386447 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொண்டும் பொதுமக்கள் தங்களது குறைகள் குறித்த மனு தொடர்பாக விசாரிக்கலாம். இந்த வசதியை எல்லா வேலை நாட்களிலும் வேலை நேரத்தின் போது பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய வழக்குகளின் குறைகளைத் தீர்ப்பது என்பது எந்த பொருத்தமான அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டதோ அவரது வரம்பிற்கு உட்பட்டதாகும். எனவே தங்களின் மனு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை அறிய அந்த மனு அனுப்பி வைக்கப்பட்ட சம்பந்தப்பட்ட அமைச்சகம்/துறை/மாநில அரசில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகலாம். இவ்வாறு மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைகளை நீக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பகுதியின் மூலம் மனு அனுப்பி வைக்கப்பட்ட பிறகு மனுதாரர் இந்த விஷயம் குறித்து தொடர்பு கொள்ள உதவும் வகையில் எந்த அதிகாரியை அணுகுவது, அவரது தொடர்பு எண் ஆகிய விவரங்கள் http://pgportal.gov.in/Status என்ற இணைய தளத்தில் பதிவேற்றப்படும். |
கேள்வி .4: | பிரதமர் அலுவலகத்தால் பிஎம்ஓபிஜி/டி/ஆண்டு/123456789 தேதி: தேதி/மாதம்/வருடம் மூலம் …. மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட எனது குறைகள் குறித்த மனுவின் மீதான கோப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்புகளின் நகல்களை தயவு செய்து எனக்கு வழங்கவும்.
பிரதமர் அலுவலகத்தால் பிஎம்ஓபிஜி/டி/ஆண்டு/123456789 தேதி: தேதி/மாதம்/வருடம் மூலம்…. அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட எனது குறைகள் குறித்த மனுவின் மீதான கோப்பினை நான் பார்வையிட விரும்புகிறேன். பிரதமர் அலுவலகத்தால் பிஎம்ஓபிஜி/டி/ஆண்டு/123456789 தேதி: தேதி/மாதம்/வருடம் மூலம் …. மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட எனது குறைகள் குறித்த மனுவின் மீதான அன்றாட முன்னேற்ற அறிக்கையை தயவு செய்து எனக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். |
பதில்: | பிரதமர் அலுவலகத்தின் பொதுமக்கள் பிரிவினால் மக்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களை கையாளும் ஏற்பாடும் முற்றிலும் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. எனினு தொடர்பான மென்பொருள் இந்த அலுவலகத்தின் கோப்புகளில் மேற்கொள்ளப்படும் குறிப்புகள், அன்றாட முன்னேற்ற அறிக்கை ஆகியவற்றை வழங்கும் ஏற்பாட்டைக் கொண்டதாக அமைந்திருக்கவில்லை. |
கேள்வி .5: | இணையம் மூலமாக எனது குறைகள் குறித்த மனுவை நான் பிரதமருக்கு அனுப்பி வைத்திருந்தேன். அந்த மனு …. அமைச்சகம்/… மாநில அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தொடர்பான கருத்துப் பரிமாற்றம்/கடிதத்தின் நகலை எனக்கு தயவு செய்து வழங்கவும்.….. |
பதில்: | இணையம் மூலமாக அனுப்பி வைக்கப்பட்ட மனுக்கள் மின்னணு முறையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே இவ்வாறு அனுப்பி வைப்பது குறித்த தகவலை தெரிவிக்கும் கடிதம் எதுவும் உருவாக்கப்படுவதில்லை. |
கேள்வி .6: | குறைதீர்க்கும் மனுவை பிரதமருக்கு அனுப்பி வைக்க விரும்புகிறேன். எனவே மாண்புமிகு பிரதமர் அவர்களின் இமெயில் முகவரியை தெரிவிக்க வேண்டுகிறேன். |
பதில்: | பிரதமருக்கு அதிகாரபூர்வமான இமெயில் முகவரி எதுவும் இல்லை. எனினும் இணையம் மூலமாக குறைகளை பதிவு செய்ய வேண்டுமெனில், முதல் கேள்விக்கு வழங்கப்பட்டுள்ள விளக்கத்தைப் பார்க்கவும். |
கேள்வி .7: | பிரதமர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குறைகளுக்கான மனுவின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு குறிப்பிட்ட வழிகாட்டி விதிமுறைகள் ஏதுமுள்ளதா? காலவரம்பு ஏதுமுள்ளதா? |
பதில்: | நடவடிக்கை எடுக்கத்தக்கவை என்று கருதப்படும் இணையம் மூலமான மனுக்கள் அனைத்தும் மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைகளை நீக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பகுதி (அமைச்சகம்/அரசுத் துறைகள்/மாநில அரசுகள் ஆகியவற்றில் உள்ள) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைகளை நீக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பகுதியின் நிர்வாக துறையான நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கான துறைக்கு பொதுமக்களின் குறைகள் குறித்த நடவடிக்கைகளை எடுப்பது குறித்து குறிப்பிட்ட வழிகாட்டி விதிமுறைகள் உள்ளன. இந்த வழிகாட்டி விதிமுறைகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றை நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கான துறையின் இணைய தளத்தில் காணலாம். |
கேள்வி .8: | பிரதமர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட குறைகளுக்கான மனுவின் மீது நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் வழிமுறை/அமைப்பு ஏதாவது உள்ளதா? |
பதில்: | நடவடிக்கை எடுக்கத்தக்கவை என்று கருதப்படும் மனுக்கள் அனைத்தும் அவை குறித்த பொருத்தமான நடவடிக்கையை எடுப்பதற்காக (அமைச்சகம்/அரசுத் துறைகள்/மாநில அரசுகள் ஆகியவற்றில் உள்ள) சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தக் குறைகளை களைவது அவர்களின் வரம்பிற்குள் வருவதாகும். மேலும் மையப்படுத்தப்பட்ட மக்கள் குறைகளை நீக்குவது மற்றும் கண்காணிப்பது ஆகியவற்றுக்கான பகுதியின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளுக்கான துறை அவ்வப்போது பரிசீலனை செய்கிறது. |
கேள்வி .9: | பொதுமக்களிடமிருந்து பிரதமர் அலுவலகத்தால் பெறப்பட்ட தகவல்களுக்கு பிரதமர் பதிலளிக்கிறாரா? |
பதில்: | இந்த அலுவலகத்தில் பெறப்படும் கடிதப் போக்குவரத்துகளுக்கு அந்தத் தகவல்களின் தன்மை, உள்ளடக்கம் ஆகியவற்றைப் பொறுத்து பிரதமர் உள்ளிட்டு பல்வேறு மட்டங்களில் பதில் அளிக்கப்படுகின்றன. |
நிர்வாகம், மனித வளம் குறித்த கேள்விகள் | |
கேள்வி .1: | பிரதமர் அலுவலக அதிகாரிகளின் பெயர்கள், பதவிப் பெயர்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை தயவு செய்து வழங்கவும்.
பிரதமர் அலுவலகத்தில் …. (பதவியில் உள்ள) திரு….. அவர்களின் தொலைபேசி எண்ணை எனக்கு வழங்கவும் |
பதில்: | பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளின் பெயர்கள், பதவிப் பெயர்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பிரதமர் அலுவலக இணையதளத்தில் அதாவது https://www.pmindia.gov.in-> என்ற இணைய தளத்தில் அதிகாரிகளின் பட்டியல் என்ற பகுதியைச் சுட்டினால் பெறுவதற்கான வசதி வழங்கப்பட்டுள்ளது. |
கேள்வி .2: | இந்தியப் பிரதமரின் தனிச் செயலாளர் மற்றும் சிறப்பு பணிக்கான அதிகாரி ஆகியோரின் பெயர்கள் கைபேசி எண்கள் ஆகியவற்றை தயவு செய்து வழங்கவும்
பிரதமர் அலுவலகத்தில்…. என்ற பதவியை வகிக்கும் திரு…. அவர்களின் கைபேசி எண்ணை தயவுசெய்து வழங்கவும். |
பதில்: | பிரதமர் அலுவலகத்தின் அதிகாரிகளின் பெயர்கள், பதவிப் பெயர்கள், தொலைபேசி எண்கள் ஆகியவற்றை பிரதமர் அலுவலக இணையதளத்தில் அதாவது https://www.pmindia.gov.in-> என்ற இணைய தளத்தில் அதிகாரிகளின் பட்டியல் என்ற பகுதியைச் சுட்டுவதன் மூலம் பெற முடியும். எனினும் அதிகாரிகளின் கைபேசி எண்களை வெளிப்படுத்துவது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை தேவையில்லாமல் வெளிப்படுத்துவதாக ஆகிவிடும். எனவே தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தின் பிரிவு 8(1)(ஜே)இன் கீழ் இத்தகைய தகவலை வெளிப்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
கேள்வி .3: | பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோரின் ஊதிய விவரங்களை தயவு செய்து வழங்கவும்.
பிரதமரின் அலுவலகத்தில் பணிபுரியும் திரு.….யின் மொத்த ஊதியம் எவ்வளவு |
பதில்: | பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் 2005ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தின் பிரிவு 4(1)(பி)இன் கீழ் உயிர்ப்பான வெளிப்படுத்தலின் ஒரு பகுதியாக பிரதமர் அலுவலக இணைய தளத்தில் உள்ளன. https://www.pmindia.gov.in ->Right to Information; தகவல் அறியும் உரிமை என்ற பிரிவின் கீழ் 2005ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தின் பிரிவு 4(1)(பி)இன் |
கேள்வி .4: | கடந்த நிதியாண்டில் பிரதமர் அலுவலகத்தின் மொத்த செலவு எவ்வளவு?
ஊதியங்கள்’ என்ற தலைப்பின் கீழ் பிரதமர் அலுவலகத்தினால் செய்யப்பட்டுள்ள செலவை தயவுசெய்து மாதவாரியாக வழங்கவும். |
பதில்: | பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதிய விவரங்கள் 2005ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தின் பிரிவு 4(1)(பி)இன் கீழ் உயிர்ப்பான வெளிப்படுத்தலின் ஒரு பகுதியாக பிரதமர் அலுவலக இணைய தளத்தில் உள்ளன. https://www.pmindia.gov.in ->Right to Information; தகவல் அறியும் உரிமை என்ற பிரிவின் கீழ் 2005ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தின் பிரிவு 4(1)(பி)இன் |
பிரதமர் தேசிய நிவாரண நிதி குறித்த கேள்விகள் | |
கேள்வி .1: | எனது மருத்துவ சிகிச்சைக்காக பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவியை நான் எவ்வாறு பெறுவது? |
பதில்: | இத்தகைய நிதியுதவியைப் பெற விரும்பும் மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் இருந்து சான்றிதழ்/மதிப்பீடு மற்றும் குடும்ப வருமானம் குறித்த அத்தாட்சி ஆகியவற்றுடன் எளிமையானதொரு மனுவை பிரதமருக்கு அனுப்பி வைப்பதன் மூலம் எந்தவொரு அரசு மருத்துவமனையிலோ/பிரதமர் தேசிய நிவாரண நிதியினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலோ மருத்துவ சிகிச்சை/அறுவை சிகிச்சை பெறுவதற்கென பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிதியுதவிக்கான விண்ணப்பத்தை மனுதாரர்கள் அனுப்பி வைக்கலாம். பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிதியுதவியைக் கோருவதற்கான வழிகாட்டி விதிமுறைகள் பற்றிய விவரங்கள் பிரதமர் அலுவலக இணைய தளமான www.pmindia.gov.in மற்றும் https://www.pmnrf.gov.in ஆகியவற்றில் உள்ளன.
|
கேள்வி .2: | பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து நிதியுதவி பெற்றுள்ள நபர்களின் விவரங்களை தயவுசெய்து எனக்கு வழங்கவும்
பிரதமர் தேசிய நிவாரண நிதியில் இருந்து திரு./ திருமதி……. க்கு எவ்வளவு நிதியுதவி வழங்கப்பட்டது |
பதில்: | கேட்கப்பட்டுள்ள விவரங்கள் முற்றிலும் தனிப்பட்ட தன்மையானதாகும். எனவே இதனை எவ்விதத்திலும் சம்பந்தப்படாத மூன்றாவது நபருக்கு வழங்குவதென்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட விவரங்களை தேவையில்லாமல் வெளிப்படுத்துவதாக ஆகிவிடும். எனவே தகவல் அறியும் உரிமைக்கான சட்டத்தின் பிரிவு 8(1)(ஜே)இன் கீழ் இத்தகைய தகவலை வெளிப்படுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. |
கேள்வி .3: | பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கான வரவு மற்றும் செலவுகளை ஆண்டுவாரியாக தயவு செய்து அளிக்கவும் |
பதில்: | பிரதமர் தேசிய நிவாரண நிதியின் வருமானம் மற்றும் செலவு ஆகியவை பற்றிய விவரங்கள் அனைத்தும் பிரதமர் அலுவலக இணைய தளமான www.pmindia.nic.in மற்றும் https://www.pmnrf.gov.in ஆகியவற்றில் உள்ளன.
|
2005ஆம் ஆண்டின் தகவல் பெறுவதற்கான உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட மனுக்கள், முதல் மேல்முறையீடுகள் தொடர்பான கேள்விகள் | |
கேள்வி .1: | பிரதமர் அலுவலகத்தின் தலைமை முதன்மைத் தகவல் அதிகாரியை அணுகுவதற்கான விவரங்களை தயவு செய்து தெரிவிக்கவும். |
பதில்: | மத்திய பொதுத் தகவல் அலுவலர், பிரதமர் அலுவலகம் சவுத் பிளாக், புதுதில்லி– 110011 தொலைபேசி : 011- 23382590 தொலை நகலி: 011- 23388157 இமெயில்:rti-pmo.applications[at]gov[dot]in |
கேள்வி .2: | மேல் முறையீட்டு அதிகாரி பற்றிய தொடர்பு விவரங்களை தயவு செய்து தெரிவிக்கவும்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் எனது முதல் மேல்முறையீட்டை பிரதமர் அலுவலகத்தில் யாருக்கு அனுப்பி வைக்க வேண்டும். |
பதில்: | இயக்குநர்(ஆர்.டி.ஐ.) பிரதமர் அலுவலகம் சவுத் பிளாக், புதுதில்லி – 110011 தொலைபேசி : 011- 23074072 (அலுவலகம்) தொலை நகலி: 011- 23388157/23019545/23016857 ஆர்.டி.ஐ. அப்பீல்களுக்கான இமெயில்: rti[dot]appeal[at]gov[dot]in |
கேள்வி .3: | பிரதமர் அலுவலகத்திலிருந்து நாட்டின் குடிமக்கள் தகவலைப் பெற என்னென்ன வசதிகள் வழங்கப்பட்டுள்ளன?
பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவலைப் பெறுவதற்கான வழிமுறைகள் என்ன? |
பதில்: | இது தொடர்பான விவரங்களை https://www.pmindia.gov.in/ta/ இணைய தளத்தில் தகவல் பெறுவதற்கான செயல்முறைகள். மேலும் இவ்வாறு தகவல் கோருபவர்கள் (ஆர்டிஐ மனுதாரர்கள்) பிரதமர் அலுவலக இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் கோருபவர்களுக்கான ஆலோசனையை காணுமாறு மனுதாரர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். தகவல் பெறுவதற்கான உரிமை -> தகவல் கோருபவர்களுக்கான (ஆர்.டி.ஐ. மனுதாரர்கள்) ஆலோசனைகள். |
இதர தகவல்கள் குறித்த கேள்விகள் | |
கேள்வி .1: | தேதி/மாதம்/வருடத்தில் நடைபெற்ற பிரகதி கூட்டத்தின் நிகழ்ச்சிக் குறிப்புகளின் நகல் ஒன்றை தயவு செய்து வழங்கவும்.
விஷயம் தொடர்பாக, பிரகதி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு(கள்) பற்றிய விவரங்களை தயவு செய்து வழங்கவும் |
பதில்: | பிரகதி கூட்டங்கள் குறித்த நிகழ்ச்சிக் குறிப்புகள் பற்றிய விவரங்களை www.pragati.nic.in என்ற இணைய தளத்தில் இருந்து பெறலாம். |
கேள்வி .2: | மாண்புமிகு பிரதமர் அவர்களின் அறிவிப்புகள் குறித்த விவரங்களை தயவு செய்து வழங்கவும். |
பதில்: | பல்வேறு தருணங்களிலும் பிரதமர் அவர்கள் பல அறிவிப்புகளையும் தொகுப்புகளையும் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த அறிவிப்புகளும் தொகுப்புகளும் பிரதமர் அவர்களின் உரைகளின் பகுதியே ஆகும். இவை பிரதமரின் அலுவலக இணைய தளத்தில் கிடைக்கின்றன. (இணைப்பு –https://www.pmindia.gov.in/ta/tag/pmspeechtamil/.) |
கேள்வி .3: | தருணத்தில் மாண்புமிகு பிரதமர் அவர்கள் ஆற்றிய உரையின் நகல் ஒன்றை வழங்கவும்.
தேதி/மாதம்/வருடத்தின் போது மாண்புமிகு பிரதமர் அவர்கள் ஆற்றிய உரையை தயவு செய்து வழங்கவும் |
பதில்: | பிரதமர் அலுவலக இணைய தளத்தில் பிரதமரின் உரைகள் கிடைக்கின்றன. (இணைப்பு – https://www.pmindia.gov.in/ta/tag/pmspeechtamil/.) | பொதுமக்களின் குறைகள் தொடர்பான கேள்விகள் |
---|