Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்திய பசிபிக் தீவு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாட்டிற்கு முன்னர் பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்

இந்திய பசிபிக் தீவு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாட்டிற்கு முன்னர் பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்

இந்திய பசிபிக் தீவு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாட்டிற்கு முன்னர் பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்

இந்திய பசிபிக் தீவு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாட்டிற்கு முன்னர் பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்

இந்திய பசிபிக் தீவு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாட்டிற்கு முன்னர் பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்

இந்திய பசிபிக் தீவு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாட்டிற்கு முன்னர் பிரதமரின் இருதரப்பு சந்திப்புகள்


இந்திய பசிபிக் தீவு நாடுகளின் கூட்டுறவுக்கான அமைப்பின் 2வது உச்சி மாநாடு இன்று ஜெய்ப்பூரில் துவங்குவதற்கு முன்னர் பிரதமர் திரு, நரேந்திர மோடி ஜெய்ப்பூரில் உள்ள ராம்பாக் அரண்மனையில் பிஜி குடியரசு நாட்டின் பிரதமர் மேதகு ஜோசையா வி. பைனிமாராமா, பப்புவா நியூகினியா நாட்டின் பிரதமர் மேதகு பீட்டர் ஓ. நீல், வானோது குடியரசின் பிரதமர் மேதகு சாட்டோ கில்மன், நோரு குடியரசின் அதிபர் மேதகு பரான் திவவேசி வாக்கா ஆகியோரை சந்தித்தார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவியை அளிப்பதற்கும், ஐக்கிய நாடுகள் சபையை சீரமைப்பதற்கும் இந்தியாவுக்கு தமது நாடுகள் ஆதரவு அளிக்கும் என்று அப்போது அவர்கள் தெரிவித்தனர். தட்பவெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தை சமாளிப்பதற்காக பசிபிக் தீவுகள் நாடுகளுக்கு இந்தியா தொழில்நுட்ப உதவியை அளிக்கும் என்றும் அந்நாடுகளுடன் இந்தியா இணைந்து செயல்படும் என்றும் அப்போது பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிஜி குடியரசு நாட்டின் பிரதமர் தங்கள் நாட்டில் மருத்துவ மையம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அந்தப் பகுதிக்கு இதுபோன்ற நிலையம் தேவை என்றும் இந்தியாவின் மருத்துவ அமைப்புகளின் உதவியுடன் இரு நாடுகள் ஒத்துழைப்புடனும் இந்த மையம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பிஜி நாட்டின் சுற்றுலாப் பிரிவுக்கு மூலதனம் தேவை என்றும் அந்நாட்டின் மருந்துப் பொருள்களை தயாரிக்கும் தொழிற்சாலை இந்தியாவின் உதவியுடன் அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பாதுகாப்புப் பிரிவு இரு நாடுகளும் கூட்டுறவை மேலும் வலுப்படுத்த ஒப்புக் கொண்டுள்ளனர். இது குறித்து விரைவில் பிஜி நாட்டின் இரு நாட்டு பிரதிகளும் சந்திப்பார்கள். விவசாயம், பால் பொருள்கள் ஆகிய பிரிவுகளில் இந்தியா பிஜி நாட்டிற்கு தேவையான கூட்டுறவை அளிக்கும். அதேபோல் பேரழிவுகள் ஏற்படும்போது தேவையான உதவிகளையும் இந்தியா மேற்கொள்ளும். பிஜி நாட்டின் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளை குறிப்பாக கட்டுமானப் பிரிவில் வாய்ப்புகளை அறிய இந்திய வர்த்தக பிரதிநிதிக்குழு பிஜி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள ஒப்புக் கொள்ளப்பட்டது.

பப்புவா நியூகினியா நாட்டின் சாலைகள், நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள் கட்டமைப்புப் பிரிவுக்கு தேவையான ஆதரவை அளிக்க இந்தியா முன்வந்துள்ளது. இந்தியாவின் எக்ஸிம் வங்கியிலிருந்து 100 மில்லியன் டாலர் அளவிற்கு அந்நாடு கடன் தர விருப்பம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு, திறன் மேம்பாடு, பொது நிர்வாகம், சுகாதாரம், கல்வி, எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு ஆகிய பிரிவுகளில் கூட்டுறவை மேம்படுத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன. இந்தியாவின் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு ஆணையத்துடன் எதிர்காலத்தில் கூட்டுறவை ஏற்படுத்திக் கொள்ள அந்நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக இந்திய வர்த்தக பிரதிநிதிக் குழு ஒன்றை பப்புவா நியூகினியா நாட்டிற்கு விரைவில் அனுப்பும்.

வானோது குடியரசின் பிரதமரும், பிரதமர் திரு. நரேந்திர மோடியும் அந்நாட்டின் திறன் மேம்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சீர்த்திருத்தம் குறித்து பேசினார்கள். குறிப்பிட்ட பிரிவுகளுக்கு அந்தந்த நாடுகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவி, அந்தப் பிரிவுகளுக்கே செலவிடப்பட வேண்டும் என்றும், அதற்கான கவனம் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். “பாம்” புயலினால் பாதிக்கப்பட்ட அந்நாட்டுக்கு இந்தியா இரண்டு லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவுக்கு நிதியுதவி அளிப்பதற்காக வானோது நாட்டு பிரதமர் நன்றி தெரிவித்தார்.

கடல் மட்டம் நோரு நாட்டில் உயர்ந்து வருவதால் அதை சமாளிக்க கடற்கரையில் தடுப்புச் சுவர்களை கட்டும் திட்டத்திற்கு இந்தியா உதவி செய்வது குறித்து அந்நாட்டின் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். பேரிடர்களை சமாளிக்க தேவையான திறனை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான கூட்டுறவை அதிகரிக்கவும் இரு நாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். தட்பவெட்ப நிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கம் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆராய்ந்தனர். நோரு நாட்டின் கப்பல்களின் போக்குவரத்து சீரமைக்கப்படவும், அவற்றை பழுது பார்க்கவும் தேவையான உதவிகளை அளிக்க இந்தியா வல்லுநர்களை அனுப்பும் என்றும் அவர் கூறினார்.