Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இலங்கைக்கு பிரதமர் பயணம்


பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்றும் நாளையும் (2017 மே, 11, 12) இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக பிரதமர் தனது பேஸ்புக்கில் பதிவு செய்திருப்பதாவது:

“இன்று தொடங்கி நான் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயமாக பயணம் மேற்கொள்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் நான் இலங்கைக்கு இருதரப்பு உறவு தொடர்பாக மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இது. இரண்டு நாடுகளுக்கு இடையே உள்ள வலுவான உறவினை இந்தப் பயணம் எடுத்துரைக்கிறது.

எனது இந்த பயணத்தின் போது நாளை (மே 12, 2017) கொழும்பில் நடைபெறவுள்ள சர்வதேச விசாக பண்டிகை கொண்டாட்டத்தில் பங்கேற்கிறேன். அங்கு புத்த மதத்தை சேர்ந்த புகழ்பெற்ற ஆன்மிகத் தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் இறைமையியலாளர்களை சந்தித்து உரையாட உள்ளேன். இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேன மற்றும் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து இந்த கொண்டாட்டத்தில் பங்கேற்பது எனக்கு பெருமை அளிக்கிறது.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள மிக நெருங்கிய இணைப்புகளில் முக்கியமான ஒன்றான புத்தமதத்தின் பாரம்பரிய உறவினை எனது பயணத்தின் முக்கிய அம்சமாகும்.
2015 ஆம் ஆண்டு நான் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போது யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமாகவும் பல நூற்றாண்டுகளாக புத்த மதத்தின் முக்கிய மையமாகவும் விளங்கும் அனுராதபுரத்தை பார்வையிடும் வாய்ப்பை பெற்றேன். இந்த முறை கண்டியில் அமைந்துள்ள பல் திருப்பொருள் ஆலயம் என்று அழைக்கப்படும் தலதா மலிகாவில் மரியாதை செலுத்தும் பெரும் பேறினை பெறுகிறேன்.

கொழும்பில் உள்ள கங்காரமையா கோவிலில் உள்ள சீமா மலகாவில் இருந்து எனது பயணம் தொடரும். அங்கு நடைபெற உள்ள பாரம்பரிய விளக்கேற்றும் விழாவில் பங்கேற்கிறேன்.
இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் பிற பிரமுகர்களை சந்திக்கிறேன்.

இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள டிக்கோயா மருத்துவமனையை துவக்கிவைத்து அங்குள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் மக்களிடம் உரையாட உள்ளேன்.
மேலும் பல விவரங்களை இலங்கையில் இருந்து சமூக ஊடகங்களில் பகிர்வேன். இலங்கையில் நான் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளையும் “நரேந்திர மோடி மொபைல் செயலியில் நேரடியாக நீங்கள் காண முடியும்”. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.