Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

தெற்காசிய செயற்கைக்கோள் – சில சிறப்பம்சங்கள்

தெற்காசிய செயற்கைக்கோள் – சில சிறப்பம்சங்கள்


தெற்காசிய அண்டை நாடுகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி விண்ணில் அளித்துள்ள தனித்துவமான பரிசு, விண்வெளி ராஜதந்திரத்தை புதிய உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

• அருகில் உள்ள நாடுகள் எந்தக் கட்டணமும் இல்லாமல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற பரிசு, உலகெங்கும் இதுவரை இல்லாத ஒரு முன்னுதாரணம்.

• 2 டன்களுக்கும் அதிகமான எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், ரூ.230 கோடிக்கும் அதிகமான செலவில் மூன்று ஆண்டுகளில் உருவாக்கப்பட்டது.

• இதன் செயல்பாட்டுத் தடம் தெற்காசியா முழுவதும் பரந்ததாக இருக்கும்.

• தெற்காசிய செயற்கைக்கோளில் 12 Ku பாண்ட் டிரான்ஸ்பான்டர்கள் உள்ளன. இந்தியாவின் அருகில் உள்ள நாடுகள் தகவல் தொடர்பை மேம்படுத்திக் கொள்ள இவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

• ஒவ்வொரு நாட்டுக்கும் குறைந்தது ஒரு டிரான்ஸ்பான்டரை பயன்படுத்திக் கொள்ள வசதி செய்யப்படும். தங்களுடைய சொந்த செயல்திட்டங்களை அதன் மூலம் அந்த நாடுகள் அனுப்பிக் கொள்ளலாம்.

• DTH தொலைக்காட்சி சேவை, VSAT தொடர்புகள், டெலி-கல்வி, டெலி மருத்துவம் மற்றும் பேரழிவு மேலாண்மை ஆதரவு போன்றவற்றில் இந்த செயற்கைக்கோள் வசதிகளை அளிக்கும். பூகம்பம், புயல்,வெள்ளம் மற்றும் சுனாமி போன்ற பேரழிவுக் காலங்களில் முக்கியமான தகவல் தொடர்பு இணைப்புகளை அளிப்பதாக இது இருக்கும்.

• இந்த செயற்கைக்கோள் மூலம் பயன்பெறும் ஏழு தெற்காசிய நாடுகளின் அரசுகளின் தலைவர்களும், செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதன் தனித்துவமான கொண்டாட்டத்தில், காணொலிக் காட்சி மூலமாக தொடர்பில் இருந்தனர்.