இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்கான இந்தியா போர்த்துகல் ஒப்பந்தத்தை திருத்தும் நெறிமுறைக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வருமானத்தின் மீதான வரி தொடர்புடைய நிதி ஏய்ப்புகளை தடுப்பதற்கு இந்த நெறிமுறைவகை செய்யும்.
இந்த நெறிமுறைஅமலுக்கு வரும் போது இந்தியாவும் போர்த்துகலும் வரி தொடர்பான தகவல்களை பரிமாறக் கொள்ள இயலும். இதனையடுத்து இருநாடுகளையும் சேர்ந்த வரி அதிகாரிகள் வரி ஏய்ப்பை தடுக்க வாய்ப்பு ஏற்படும்